Home அரசியல் அ.தி.மு.க. ஹாட்ரிக் வெற்றி பெற வேண்டுமானால், செய்ய வேண்டியது இதுதான்.

அ.தி.மு.க. ஹாட்ரிக் வெற்றி பெற வேண்டுமானால், செய்ய வேண்டியது இதுதான்.

406
0

அதிமுக ஹா ட்ரிக் வெற்றி பெற வேண்டும் என்றால், பா.ஜ.க.வுடன் கூட்டணியை முறிக்க வேண்டும் என்ற கோரிக்கை பல்வேறு அ.தி.மு.க. நிர்வாகிகள் மட்டத்தில் எழுப்பப்பட்டு வருகிறது.

இதுகுறித்து அம்பை சக்தி எனப்படும் திருநெல்வேலி, அம்பாசமுத்திரம் தொகுதி அமைப்பாளர் கடுமையான ஒரு கடிதம் எழுதியிருக்கிறார். பாராளுமன்ற தேர்தல் தோல்வியைப்போல மறுபடியும் நிகழாமல் இருக்க பா.ஜ.க-வை
கூட்டணியில் சேர்க்கவேண்டாம். பாராளுமன்ற தேர்தலின் போதே கோடிக்கணக்கான தொண்டர்களுக்கு பா.ஜ.க கூட்டணியில் உடன்பாடு இல்லை. தோல்வி ஏற்பட்டதும் அதிமுக தொண்டர்கள் தங்களது உள்ள குமுறலை கொட்டி தீர்த்துவிட்டனர்.

புரட்சித்தலைவர், புரட்சித்தலைவி காலத்தைப்போல அதிமுக வீறுநடை போட வேண்டும். பா.ஜ.க-வின் அடிமை என பொதுமக்கள் நினைக்கின்ற இந்த மாயத்தோற்றத்தை தகர்த்தெறிய பா.ஜ.க. இல்லாத கூட்டணி அமைப்போம்.

தெருவுக்கு 4 பேர் கூட இல்லாத பா.ஜ.க – தமிழகத்தில் 60 தொகுதியில் வெற்றிப்பெறுவோம் என் கிறார்கள். 60 என்ன 234 தொகுதியில் கூட வெற்றிப்பெறட்டும். அதிமுக முதுகில் ஏறி அல்ல தனித்து நின்று பா.ஜ.க வெற்றிபெறட்டும்.

பா.ஜ.க சொல்வதற்கெல்லாம் தலையாட்டினால் அதிமுக தேய்ந்து பா.ஜ.க வளரும்.
தொண்டர்களுக்கெல்லாம் ஒரே கவலை ,, எங்கே எங்களையும் பா.ஜ.க அடிமையாக மாற்றிவிடுவீர்களோ என்று. கூட்டணி அமைவதை பொறுத்துத்தான் எதிர்கால வெற்றி இருக்கிறது.இடைத்தேர்தல் வெற்றி என்பது வேறு பொதுத்தேர்தல் வெற்றி என்பது வேறு.

பா.ஜ.க-வை கூட்டணியில் சேர்த்தால் 99% முஸ்லீம் ஓட்டுகள் கிடைக்காது. 50% கிறிஸ்தவர்கள் ஏற்கனவே திமுக காங்கிரஸ் அனுதாபிகளாக மாறிவிட்டார்கள். பா.ஜ.க-வை சேர்த்தால் சிறுபான்மையினர் ஓட்டுகள் மொத்தமாக மாறும் சூழ்நிலை ஏற்பட்டுவிடும் என்று கூறியிருக்கிறார்.

Advertisement