Home தமிழ்நாடு நாளை முதல் புறநகர் ரயில்களில் பொதுமக்களுக்கு அனுமதி..! என்னென்ன கட்டுப்பாடுகள் தெரியுமா? 

நாளை முதல் புறநகர் ரயில்களில் பொதுமக்களுக்கு அனுமதி..! என்னென்ன கட்டுப்பாடுகள் தெரியுமா? 

1236
0

தமிழகத்தில் வீசிய கொரோனாவின் இரண்டாவது அலை பல உயிர்களை பலிவாங்கியது. இதனையடுத்து கொரோனா பரவலை  கட்டுக்குள் கொண்டு வருவதற்கு ஊரடங்கு ஒன்றுதான் சிறந்த வழி என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் முழு ஊரடங்கினை பிறப்பித்தார். இதே நிலையில் மத்திய அரசாங்கமும் ரயில் போக்குவரத்தை நிறுத்தி வைத்திருந்தது. இதனையடுத்து தொற்று கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இரண்டாவது அலையின் தாக்கம் மெல்ல மெல்ல குறைய தொடங்கிய உடன் ஊரடங்கு கட்டுப்பாடுகளுக்கும் தளர்வுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இதுவரை முன்கள பணியாளர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு மட்டுமே ரயிலில் செல்ல அனுமதி வழங்கப்பட்டிருந்தது. இந்நிலையில் பொதுமக்களுக்கான ரயில் போக்குவரத்திற்கும் மத்திய அரசாங்கம் அனுமதி அளித்துள்ளது. இதனையடுத்து புறநகர் ரயில்கள் நாளை முதல் (25.6.2021) இயக்கப்படும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Advertisement