Home அரசியல் வேடந்தாங்கலை அபகரிப்பது யார்..? அன்புமணி ஆவேசம்.

வேடந்தாங்கலை அபகரிப்பது யார்..? அன்புமணி ஆவேசம்.

427
0

தொழிற்சாலைகளுக்கு ஆதரவு அளிப்பதாக வேடந்தாங்கல் நிலத்தை அபகரிக்கும் முயற்சி நடப்பதாக அன்புமணி குற்றம் சாட்டியிருக்கிறார்.
வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் அமைந்துள்ள 73 ஏக்கர் நிலத்தை உள்ளடக்கிய 5 கிலோ மீட்டர் சுற்றளவு பகுதிகள் சரணாலயப் பகுதியாக அறிவிக்கப்பட்டன. அதன்படி 5 கி.மீ. சுற்றளவும் மையப்பகுதியாகவே கருதப்படுகிறது. அந்த மையப்பகுதியை 3 கி.மீ. சுற்றளவாக வனத்துறை முடிவு செய்திருக்கிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி இன்று கடிதம் எழுதியிருக்கிறார்.


வேடந்தாங்கல் சரணாலயப் பகுதியில் உள்ள சன் ஃபார்மா மருந்து நிறுவனத்தின் ஆலையை விரிவாக்கம் செய்வதற்கு வசதியாகவே, வேடந்தாங்கல் சரணாலயப் பகுதி வகைப்படுத்தப்படுவதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் குறித்தும், தடை செய்யப்பட்ட சரணாலயப் பகுதியில் இரு தொழிற்சாலைகளை அமைக்க அனுமதி அளிக்கப்பட்டது குறித்தும் விளக்கமளிக்கும்படி வனத்துறை அதிகாரிகளுக்கு எழுதிய கடிதத்தில் கேட்டுக் கொண்டிருந்தேன்.ஆனால், இன்று வரை அவை குறித்து தமிழக வனத்துறை சார்பில் எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை.


வேடந்தாங்கல் சரணாலயப் பகுதிகளில் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் தொழிற்சாலைகளை கட்ட அனுமதி அளிக்கக் கூடாது. சரணாலயப் பகுதிகளுக்குள் இந்த ஆலைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டது எப்படி? பறவைகளுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் வகையிலான இந்த விதிமீறலுக்கு துணை போனவர்கள் யார்? எனக் கேள்வி எழுப்பியவர், “தனியார் தொழிற்சாலைகளுக்கு ஆதரவாக சரணாலயத்தை வகைப்படுத்தும் திட்டத்தைக் கைவிட வேண்டும்; விவசாயத்தையும், சுற்றுச்சூழலையும் கெடுக்கும் எந்த தொழிற்சாலையையும் அங்கு அனுமதிக்கக்கூடாது என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.

Advertisement