Home அரசியல் ஆர்.எஸ். பாரதியை இப்போது கைது செய்துவது ஏன்…. கண்டிக்கத்தான் வேண்டுமா இந்த கைதை..?

ஆர்.எஸ். பாரதியை இப்போது கைது செய்துவது ஏன்…. கண்டிக்கத்தான் வேண்டுமா இந்த கைதை..?

481
0

ஆர்.எஸ்.பாரதி பேசியது தவறா அல்லது அவரை கைது செய்தது தவறா என்பது குறித்து நீண்ட விளக்கம் கொடுத்துள்ளது, சட்டப்பஞ்சாயத்து இயக்கம். ஆர்.எஸ்.பாரதி அவர்கள்.. ஊடகங்களை சிவப்பு விளக்கு பகுதி தொழிலோடு ஒப்பிட்டுப் பேசியதும்… தாழ்த்தப்பட்டவர்கள் உயர்நீதிமன்ற நீதிபதியானது திராவிட இயக்கம் போட்ட பிச்சை என்று பேசியதும்… கடுமையாக கண்டிக்கத்தக்கது. இதில் பெரும்பாலானோருக்கு மாற்றுக் கருத்து இருக்க முடியாது என்றே கருதுகிறேன்..!!

தாழ்த்தப்பட்ட நீதிபதிகள் தங்கள் தகுதியாலும் திறமையாலும்தான் உயர்நீதிமன்ற நீதிபதி ஆகியிருப்பார்கள்.. அதற்கு திராவிட இயக்கம் ஒரு கருவியாக இருந்து உதவியது என்று சொல்லியிருந்தால் வரவேற்கலாம் . ஆனால், அவர்கள் நீதிபதியானது திராவிட இயக்கம் போட்ட பிச்சை என்று பேசுவது ஏற்றுக்கொள்ள முடியாதது.. நிற்க!!

கவனிக்கத்தக்கது..!! ஆர்.எஸ்.பாரதி 100 நாட்களுக்கு முன்னர் பேசிய பேச்சு இது.. இந்த வீடியோ சமூக ஊடகங்களிலும் தொலைக்காட்சியிலும் அப்போது பரபரப்பு விவாதம் ஆகியது( அப்போது வருத்தம் தெரிவித்தார் ஆர்.எஸ்.பாரதி) அப்போதே கைது செய்திருந்தால் ஆளுங்கட்சியான அதிமுகவின் செயல்பாட்டை யாரும் சந்தேகித்திருக்க முடியாது.. 100 நாட்கள் கடந்து இப்போது கைது செய்வது உள்நோக்கமுடையது என்று தெளிவாகக் காட்டுகிறது..
என்ன உள்நோக்கம் ..??

முதல்வர், துணைமுதல்வர் உள்ளிட்டோர் மீதான ஊழல் விவகாரங்கள் மற்றும் வழக்குகளை முன்னெடுப்பவர் ஆர்.எஸ்.பாரதி.. இப்போது கூட கொரானா காலத்தில் நடைபெற்ற ஊழல்களை அம்பலப்படுத்த சில முயற்சியை எடுத்திருக்கிறார்.. அது குறித்தான விவரங்களை இன்றைய பேட்டியில் தெரிவித்திருந்தார்.. மேலும் விபி துரைசாமி பேட்டியால் திமுக வானது தாழ்த்தப்பட்டோருக்கு உரிய மரியாதை அளிக்காத கட்சி என்ற செய்தி பரவி வரும் வேளையில், இந்த கைதானது “தாழ்த்தப்பட்டோர் வாக்கு வங்கியை” தன் பக்கம் திருப்பும் என்று ஆளுங்கட்சி கணக்குப் போட்டிருக்கலாம்.. அதாவது, ஆளுங்கட்சியானது தனது ஊழல்கள் மீதான கவனத்தை திசை திருப்ப “தாழ்த்தப்பட்டோர்” விவகாரத்தை கருவியாகப் பயன்படுத்துகிறது..

ஒரே கல்லில் இரண்டு மாங்காய்..ஓராண்டுக்குள் தேர்தல் வர இருக்கிறதே..!! ஒட்டு மொத்தத்தில்,
திமுகவின் ஆர்.எஸ்.பாரதி பேசியது கண்டிக்கத்தக்கது..!! ஆளுங்கட்சியானது ஆர்.எஸ்.பாரதியை
காலங்கடந்து கைதுசெய்வது உள்நோக்கம் உடையது என்பது கவனிக்கத்தக்கது என்று சட்டப்பஞ்சாயத்து இயக்கம் தெரிவிக்கிறது.

Advertisement