Home உலகம் உலகளவில் 13.96 கோடியை கடந்த கொரோனா பாதிப்பு..

உலகளவில் 13.96 கோடியை கடந்த கொரோனா பாதிப்பு..

372
0

உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவரின் எண்ணிக்கை 13.96 கோடியை கடந்துள்ளது.உலகையே அச்சுறுத்தி வரும் ஒன்றாக கொரோனா வைரஸ் தொற்று இருந்து வருகிறது. கொரோனா தொற்றுக்கு எதிரான மருந்து கண்டுபிடிக்கப்பட்டு உலகில் உள்ள பல நாடுகளில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.. இருப்பினும் நாளுக்கு நாள் இந்த வைரஸின் தாக்கம் உலகம் முழுவதும் உள்ள பல நாடுகளில் அதிகரித்த வண்ணம் காணப்படுகிறது. உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவரின் எண்ணிக்கை 13.96 கோடியை கடந்துள்ளது.

இதுவரை கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களில் 29.98 லட்சத்திற்கும் மேற்பட்டோர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதே சமயத்தில் 11.87 கோடிக்கும் மேற்பட்டோர் இதுவரை சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement