திருச்சி பொன்மலை மாஜி ராணுவ காலனியில் இருந்து வேளாங்கண்ணிக்கு 34 வது ஆண்டாக மின் அலங்கார தேர்பவனியோடு பாதயாத்திரையாக சென்ற பக்தர்கள்

Sep 4, 2025 - 07:00
 74

நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் ஆண்டுதோறும் உலகப் பிரசித்தி பெற்ற வேளாங்கண்ணி மாதா ஆலயத்தில் செப்டம்பர் மாதம் தேர் திருவிழா நடைபெறுவது வழக்கம் அதன்படி கடந்த 29ஆம் தேதி கொடியேற்றத்துடன் திருவிழா துவங்கியது. அந்த நாள் முதல் தேர் பவனி நடைபெறும் நாளான வருகின்ற  செப்டம்பர் 7ம் தேதி முதல் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வேளாங்கண்ணி ஆலயத்திற்கு பாதயாத்திரையாக சென்று வழிபடுவது வழக்கம் இந்த நிலையில்

திருச்சி பொன்மலை மாஜி ராணுவ காலனியில்  திரு இருதய ஆண்டவர் ஆலயம் உள்ளது  இந்த ஆலயம் அப்பகுதி கிறிஸ்தவர்களின் முக்கியமான ஆலயங்களில் ஒன்றாகும் இந்த ஆலயத்தில் நேற்று இரவு அப்பகுதியில் வசிக்கும் மக்கள் 34 வது ஆண்டாக பாதயாத்திரை செல்வதற்கான சிறப்பு திருப்பலி ஆலயத்தில் நடைபெற்றது திருப்பலியை பங்கு தந்தை யூஜின்  நடத்தி வைத்தார். 

பின்னர் மின் அலங்காரத்தால் அலங்கரிக்கப்பட்ட வேளாங்கண்ணி மாதா தேர் பவனியை ஜெபம் செய்து துவக்கி வைத்தார். 29ம் ஆண்டாக அன்னதானமும் நடைபெற்றது. பின்னர் 100க்கும் மேற்பட்டோர் தேர் பவனியோடு புறப்பட்டனர். தேர் பவனி செல்லும்போது வழி நெடுகிலும் பொதுமக்கள் வேளாங்கண்ணி மாதாவை வழிபட்டு சென்றனர். இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை 
ஜான்பீட்டா், சகாயராஜ்,
 சுரேஷ், டோமினிக், அருண்குமார், மும்பை ரெக்ஸ், ஆனந்தகுமார் பிரசாந்த் சார்லஸ் சதீஷ், கிஷோர்  ஆகியோர் செய்து இருந்தனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 1