*விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்திற்கு விசில் சின்னம்- தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு- 25 ஆம் தேதி ஆலோசனைக் கூட்டம் விஜய் அறிவிப்பு*

Jan 22, 2026 - 16:32
 67
*விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்திற்கு  விசில் சின்னம்- தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு- 25 ஆம் தேதி ஆலோசனைக் கூட்டம் விஜய் அறிவிப்பு*

விஜயின் தமிழக வெற்றிக் கழகத்திற்கு விசில் சின்னம்- தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு- 25 ஆம் தேதி ஆலோசனைக் கூட்டம் விஜய் அறிவிப்பு

தமிழக வெற்றிக் கழகத்துக்கு விசில் சின்னததை இந்திய தேர்தல் ஆணையம் இன்று ஒதுக்கியுள்ளது. தமிழக சட்டப்பேரவையில் போட்டியிட பொது சின்னம் ஒதுக்கக் கோரி இந்திய தேர்தல் ஆணையத்திடம் கடந்தாண்டே தமிழக வெற்றிக் கழகம் சார்பில் மனு அளிக்கப்பட்டிருந்தது. விசில், ஆட்டோ, கிரிக்கெட் மட்டை, சாம்பியன் கோப்பை போன்ற 10 விருப்ப சின்னங்களை பட்டியலிட்டு அதில் ஒன்றை ஒதுக்குமாறு மனுவில் வலியுறுத்தப்பட்டிருந்தது. இந்த நிலையில், தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளிலும் போட்டியிட தமிழக வெற்றிக் கழகத்துக்கு பொதுச் சின்னமாக விசிலை தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது. தவெக அங்கீகரிக்கப்படாத கட்சியாக இருந்தாலும் தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளின் படி, கணக்குகளை தாக்கல் செய்துள்ளதால் பொதுச் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் முதல் தேர்தலிலேயே விஜய் தலைமையிலான தவெகவினர் பொதுச் சின்னத்தில் போட்டியிட வாய்ப்பு கிடைத்துள்ளது.

 முன்னதாக, தவெக பொதுச் செயலாளர் புஸ்சி ஆனந்த தனது எக்ஸ் தளத்தில், “வரும் 25--ம் தேதி ஞாயிற்றுக்கிழமை) காலை 10.30 மணிக்கு மாமல்லபுரம் ஃபோர் பாயிண்ட்ஸ் பை ஷெரட்டனில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் கலந்துகொள்ளும் மாநில, மாவட்ட அளவிலான கழகச் செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில், சட்டமன்றத் தேர்தல் பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம்” எனப் பதிவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

What's Your Reaction?

Like Like 1
Dislike Dislike 0
Love Love 2
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0