*திருப்பூர் மாவட்டத்தில் பத்துக்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகள் பங்கேற்கும்  தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கான மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்.... நீங்களும் ஆசிரியர் ஆவதற்கு ஒரு அறிய வாய்ப்பு*

Dec 14, 2025 - 21:23
 31
*திருப்பூர் மாவட்டத்தில் பத்துக்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகள் பங்கேற்கும்  தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கான மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்.... நீங்களும் ஆசிரியர் ஆவதற்கு ஒரு அறிய வாய்ப்பு*

திருப்பூர் மாவட்டத்தில் பத்துக்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகள் பங்கேற்கும் தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கான மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது

தமிழ்நாடு தனியார் ஆசிரியர் மன்றம் சார்பில், தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கான வேலைவாய்ப்பு முகாம் டிசம்பர் 21-12-2025- ஞாயிற்றுக்கிழமை அன்றைய தினம் திருப்பூர் பல்லடத்தில் உள்ள, கண்ணம்மாள் நேஷனல் பள்ளியில் காலை, 9.00-மணி முதல்,மாலை,2:00- மணி வரையில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இது முற்றிலுமாக ஆசிரியருக்கான சிறப்பு முகாம் என்பதனால், .ஆசிரியர் பயிற்சி பெற்ற பட்டதாரிகள், முதுநிலை பட்டதாரிகள், உடற்கல்வி ஆசிரியர்கள்,என ஆண், பெண், இருபாலரும் தங்களது கல்விச்சான்றுடன் கலந்து கொண்டு வேலைவாய்ப்பு பெறலாம். இந்த முகாமில் பங்கேற்க வயது வரம்பில்லை.... இந்த வேலை வாய்ப்பு முகாமில் 10-க்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகள் நேரடியாக கலந்து கொண்டு ஆசிரியர்களை தேர்வு செய்கின்றார்கள். எனவே, ஆசிரியர்கள் அதிகளவில் பங்கேற்று இம்முகாமினை பயன்படுத்தி வேலைவாய்ப்பைப்பெறலாம் என, தெரிவிக்கப் பட்டுள்ளது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0