திருச்சியில் வாகன ஓட்டிகள் இனி தப்பிக்க முடியாது- புதிய திட்டத்தை துவக்கி வைத்த திருச்சி மாநகர காவல் ஆணையர்

Sep 16, 2025 - 21:17
Sep 16, 2025 - 21:19
 1.6k
திருச்சியில் வாகன ஓட்டிகள் இனி தப்பிக்க முடியாது- புதிய திட்டத்தை துவக்கி வைத்த திருச்சி மாநகர காவல் ஆணையர்

 திருச்சியில் வாகன ஓட்டிகள் இனி தப்பிக்க முடியாது- புதிய திட்டத்தை துவக்கி வைத்த திருச்சி மாநகர காவல் ஆணையர்

திருச்சி மாநகரத்தில் போக்குவரத்து விதிகளை மீறி இருசக்கர வாகனங்களில் தலைக்கவசம் அணியாமல் செல்வோர் மற்றும் 3 நபர்கள் ஒரே இருசக்கர வாகனத்தில் பயணிப்பவர்களை கண்டறிந்து, அவர்களை துல்லியமாக தானாக படம் பிடித்து தானியங்கி வாகன எண் அடையாளம் காணும் தொழில்நுட்ப கேமரா மூலம் (Automatic Number Plate Recognition) வழக்கு பதிவு செய்யும் விதமாக புதிய 4 அதிநவீன உயரக கேமராக்கள் மன்னார்புரம் சந்திப்பில் பொருத்தப்பட்டும், அதனை இன்று முதல் செயல்படும் வகையில் இன்று திருச்சி மாநகர காவல் ஆணையர் காமினி தொடங்கி வைத்தார். திருச்சி மாநகரில் ஏற்கனவே 29 அதிநவீன உயர் ரக கேமராக்கள் பொருத்தப்பட்டு செயல்பாட்டில் இருந்து வருகிறது என்பது குறிப்பிடதக்கது.

What's Your Reaction?

Like Like 9
Dislike Dislike 3
Love Love 2
Funny Funny 1
Angry Angry 2
Sad Sad 4
Wow Wow 3