தொடர் குற்ற சம்பவங்களில் ஈடுபட்டவர் மீது குண்டாஸ்- திருச்சி எஸ்பி அதிரடி
தொடர் குற்ற சம்பவங்களில் ஈடுபட்டவர் மீது குண்டாஸ்- திருச்சி எஸ்பி அதிரடி
திருச்சி மாவட்டம் துவாக்குடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட துவாக்குடி மலையைச் சேர்ந்த ஜான்சி, ஜான்ராஜ் என்பவரின் மகனிடம் 28.07.2025 அன்று ராஜீவ் காந்தி நகர் பகுதியில் வழிப்பறி சம்பவம் நடந்தது. அப்போது, காமராஜர் நகரைச் சேர்ந்த நந்தா (எ) நந்தகுமார் (35), சசி (எ) சசிக்குமார் (32), ரவிக்குமார் (26) ஆகியோர் ஜான்சியிடம் அவரது மகன் ஜான் போஸ்கோ எங்கு இருப்பார் என கேட்டு, கத்தியை காட்டி மிரட்டி, அவரிடமிருந்த ரூ.1000-ஐ பறித்துச் சென்றனர். இந்த சம்பவம் தொடர்பாக துவாக்குடி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. பின்னர் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில், சிறையில் இருந்து வரும் குற்றம் சாட்டப்பட்டவர்களின் தொடர் குற்றச் செயல்களை கருத்தில் கொண்டு, பிரதான குற்றவாளி நந்தா (எ) நந்தகுமார் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செ.செல்வநாகரத்தினம், பரிந்துரையின் பேரில், திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் தடுப்பு காவல் ஆணையை(குண்டாஸ்) பிறப்பித்துள்ளார். நேற்று (25.08.2025) அந்த ஆணை சிறையில் உள்ள குற்றவாளியிடம் சார்வு செய்யப்பட்டது. மேலும், திருச்சி மாவட்டத்தில் 2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் இதுவரை மொத்தம் 73 தடுப்பு காவல் ஆணைகள் பிறப்பிக்கப்பட்டு, தொடர்புடைய குற்றவாளிகளிடம் சார்வு செய்யப்பட்டுள்ளதாக திருச்சி மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது.
What's Your Reaction?
Like
1
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0