*சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 75 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு ஸ்ரீரங்கம் ராகவேந்திரா கோவிலில் ரசிகர்கள் தங்க தேர் இழுத்து வழிபட்டனர்- ரசிகர்களை ரஜினி சந்திக்க வேண்டும் என ரஜினி ரசிகர்கள் கோரிக்கை*
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 75 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு ஸ்ரீரங்கம் ராகவேந்திரா கோவிலில் ரசிகர்கள் தங்க தேர் இழுத்து வழிபட்டனர்- ரசிகர்களை ரஜினி சந்திக்க வேண்டும் என ரஜினி ரசிகர்கள் கோரிக்கை
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 75வது பிறந்த நாள் மற்றும் தமிழ் திரை உலகில் ரஜினியின் பொன்விழா ஆண்டை முன்னிட்டு இன்று காலை திருச்சி ஸ்ரீரங்கம் பகுதியில் உள்ள ராகவேந்திரா கோவிலில் திருச்சி மாவட்ட ரஜினி ரசிகர்கள் அவர் நீடூடி வாழ வேண்டும் என தங்க தேர் இழுத்து வழிபாடு செய்தனர். பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மேலும் ரஜினி ரசிகர்கள் இது குறித்து கூறும்போது ரஜினிகாந்த் நீடூடி வாழ வேண்டும் எனவும் திரையுலகில் அவரின் பொன்விழா ஆண்டை முன்னிட்டும் இன்று தங்கத்தேர் இழுக்கப்பட்டது 47வது ஆண்டாக தொடர்ந்து ராகவேந்திரா கோவிலில் தேர் இழுத்து வருகிறோம்.
தலைவர் ரசிகர்களை சந்திக்க வேண்டும் அவர்களுடன் புகைப்படம் எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். இந்த நிகழ்வில் மாவட்ட செயலாளர் கலீல், எஸ்.கர்ணன் , எஸ்.டி.ராஜ், ஆர். பாலன், ராயல் ராஜ் நாசர், சுதர்சன்,நோபல் அலெக்ஸ், அம்மன் கார் சிவா ,ஸ்ரீரங்கம் நகர மன்றம் சண்முகம், மாரிமுத்து, ஆர். கே. காமராஜ், ஆனந்த்ராஜ், சிம்மா, மணி, மற்றும் இளைஞர் அணி ரேண்ட் ஆசை, புத்தூர் கருப்பையா, ரஜினி பாலு, உறையூர் ரஜினி சிவா, ரஜினி ஆனந்த், சிந்தாமணி காமராஜ், சுரேஷ், கண்ணன்,
கேசவன், மேலூர் சிலிண்டர் ராஜா, எஸ்வி ஆர் சதீஷ், ஆட்டோ மோகன், ரயில்வே செந்தில், பொன்மலை மோகன், ராமசாமி, துவாக்குடி மாரியப்பன், பாரதி நகர் சிலிண்டர் ராஜா, உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு தங்கத் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சுதர்சன் செய்திருந்தார்.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0