*திருச்சியில் ஓட்டுநர் பழகுநர் உரிமம் பெற 1000 ரூபாய் லஞ்சம் வாங்கி கையும் களவுமாக சிக்கிக் கொண்ட மோட்டார் வாகன ஆய்வாளர் - கைது செய்து போலீசார் விசாரணை*

Dec 12, 2025 - 17:42
Dec 12, 2025 - 18:11
 278
*திருச்சியில் ஓட்டுநர் பழகுநர் உரிமம் பெற 1000 ரூபாய் லஞ்சம் வாங்கி கையும் களவுமாக சிக்கிக் கொண்ட மோட்டார் வாகன ஆய்வாளர் - கைது செய்து போலீசார் விசாரணை*
லஞ்சம் வாங்கி கையும் களவுமாக சிக்கிக்கொண்ட மோட்டார் வாகன ஆய்வாளர் மணிபாரதி

திருச்சியில் ஓட்டுநர் பழகுநர் உரிமம் பெற  1000 ரூபாய் லஞ்சம் வாங்கியதாக திருச்சி வட்டார போக்குவரத்து அலுவலக போக்குவரத்து வாகன ஆய்வாளர் கைது

ஓட்டுநர் பழகுநர் உரிமம் பெற ரூ.1,000 லஞ்சம் வாங்கியதாக திருச்சி வட்டாரப் போக்குவரத்து அலுவலக போக்குவரத்து வாகன ஆய்வாளர் கைது செய்யப்பட்டார். மேலும் 13 ஆயிரம் ரூபாயை கைப்பற்றி லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருச்சி மாவட்டம் குண்டூர் பகுதியை சேர்ந்தவர் பழனியப்பன். ஓய்வு பெற்ற ராணுவ வீரர். இவர் ஓட்டுநர் பயிற்சி பள்ளி நடத்தி வருகிறார் இவர் இரண்டு பேருக்கு ஓட்டுனர் பழகுநர் உரிமம் பெறுவதற்காக பழனியப்பன் திருச்சி பிராட்டியூரில் உள்ள மேற்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு சென்றார். அங்கு மோட்டார் வாகன ஆய்வாளர் மணிபாரதி என்பவரிடம் ஓட்டுனர் பழகுநர் உரிமம் பெறுவதற்கான விண்ணப்பங்களை அளித்துள்ளார். அப்போது போக்குவரத்து வாகன ஆய்வாளர் மணிபாரதி பழகுநர் ஒட்டுநர் உரிமை (எல்.எல்.ஆர்)எடுக்க அதற்கு ரூ.1000 லஞ்சம் தர வேண்டும் என்று கூறியுள்ளார். லஞ்சம் கொடுக்க விரும்பாத பழனியப்பன் இது குறித்து திருச்சி லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி மணிகண்டன் தலைமையில் இன்று போலீசார் போக்குவரத்து வாகன ஆய்வாளர் மணிபாரதி பழனியப்பனிடம் இருந்து ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய போது கையும் களவுமாக பிடித்தனர். மேலும் மணிபாரதியின் உதவியாளர் திலீப்குமார் என்பவரிடமிருந்து 13,000 பணத்தை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைப்பற்றியுள்ளனர் இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 2
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 1
Wow Wow 0