*திருச்சி ஸ்ரீரங்கம் யாத்ரி நிவாஸில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தற்கொலை- அழுகிய நிலையில் உடல்களை மீட்டு போலீசார் விசாரணை*

Dec 19, 2025 - 14:01
 351
*திருச்சி ஸ்ரீரங்கம் யாத்ரி நிவாஸில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தற்கொலை- அழுகிய நிலையில் உடல்களை மீட்டு போலீசார் விசாரணை*

திருச்சி ஸ்ரீரங்கம் யாத்திரி நிவாஸில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தற்கொலை- அழுகிய நிலையில் உடல்கள் மீட்பு

தஞ்சை மாவட்டம் திருவையாறு பகுதியைச் சேர்ந்தவர் சீனிவாசன் வயது (67).இவரது மனைவி செண்பகவல்லி வயது (65).இருவரும் தனது 42 வயது மகள் 37வது மகள் ஆகிய இருவருடன் கடந்த பத்தாம் தேதி ஸ்ரீரங்கம் யாத்திரி நிவாஸில் வந்து தங்கியுள்ளனர். கடந்த நான்கு நாட்களாக வெளியே வரவில்லை அரை பூட்டப்பட்டு இருந்தது.

 இன்று காலையில் துர்நாற்றம் வீசியது. இதை பார்த்ததும் ஊழியர்கள் சந்தேகத்தின் பெயரில் ஸ்ரீரங்கம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீஸ் வந்ததும் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்று பார்த்தபோது 4 பேரும் உணவில் விஷம் கலந்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. அழுகிய நிலையில் பிணத்தை மீட்டு ஸ்ரீரங்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 1
Wow Wow 0