*திருச்சி பி.எல்.ஏ நிசான் ஷோரூமில் நிசான் கிராவைட் புதிய கார் அறிமுக விழா வெகு சிறப்பாக நடைபெற்றது*
திருச்சி பி எல் ஏ நிசான் ஷோரூமில் நிசான் கிராவைட் புதிய கார் அறிமுக விழா வெகு சிறப்பாக நடைபெற்றது.
பி எல் ஏ குரூப்ஸ் சேர்மங்கள் பழனியப்பன், சுப்பிரமணியன் ஆகியோர் தலைமை வகித்தனர். பிஎல்ஏ நிசான் ஷோரூம் மேலாண்மை இயக்குனர் அண்ணாமலை முன்னிலை வகித்தனர். தினமலர் ஆசிரியர் முனைவர் ஆர்.ராமசுப்பு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு புதிய நிசான் கிராவைட் காரை அறிமுகம் செய்து வைத்து முதல் வாடிக்கையாளர்களுக்கு வாகனத்தின் சாவியை வழங்கினார். நிசான் விற்பனை மேலாளர் முகுந்தன் அறிமுக உரையாற்றினார்.
நிசான் தயாரிப்பான கிராவைட் காரில் புதிய டிஆர்எல் லைட்டிங் செட் உள்ளது. பேனட் பகுதியில் பெரிய லெட்டர் அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன. பம்பர் பகுதியிலும் சி வடிவ லைட்டுகள் உள்ளன. வீல் வடிவமைப்பும் வித்தியாசமான வடிவமைப்பாக வழங்கப்பட்டது. பின்பக்க ஸ்டைலிங் சற்று வித்தியாசமாக உள்ளது. பாரெஸ்ட் கிரீன், ஆச்சி பிளாக், பிளேடு சில்வர், மெட்டாலிக் கிரே மற்றும் ஸ்னோ வைட் ஆகிய நிறங்களில் விற்பனைக்கு வருகிறது. நிசான் லோகோ மற்றும் சிறிய மாற்றங்கள் மட்டுமே வித்தியாசமாக இருக்கிறது. 1.0 லிட்டர் நேச்சுரலி அஸ்பயர்டு பெட்ரோல் இன்ஜின் வழங்கப்படுகிறது. நிசான் கிராவைட் விசியா மேனுவல், ஆக்சென்டா, என்கனெக்டா , நிசான் கிராவைட், விற்பனைக்கு உள்ளது. டெக்னா லான்ச் எடிசன் இந்த மாடலில் கூடுதல் ஆடம்பரம் சேர்க்கும் வகையில் நிசான் அறிமுகப்படுத்தியுள்ள குறுகிய கால வேரியன்ட் ஆகும். இது குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே கிடைக்கும். மற்ற வேரியன்ட்களில் இல்லாத ஜந்து பிரத்யேக அம்சங்களை கொண்டுள்ளது. அவை சில மாதங்களுக்கு பிறகு டெக்னா வேரியன்ட்டில் ஸ்டாண்டர்ட் அம்சங்களாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த லான்ச் எடிஷனில் ஜெபிஎல் சவுண்ட் சிஸ்டம்,டுயல் டேஷ்கேம், காற்று சுத்திகரிப்பான் கேபினை சுற்றிலும் விளக்குகள் முதல் வரிசை இருக்கை பயணிகளுக்கான கழுத்து குஷன்கள், இரண்டாவது இருக்கை பயணிகளுக்கான இடுப்பு குஷன்கள் மற்றும் கவர்ச்சிகரமான பாடி கிராபிக்ஸ் ஆகியவை அடங்கும். கிராவைட் கார் நிசான் நிறுவனத்தின் 1.0 லிட்டர் நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல் எஞ்சின் உடன் வந்துள்ளது. அதிகப்பட்சமாக 71 பிஎச்பி ஆற்றலையும் 96 என்.எம் டார்க் திறனையும் உற்பத்தி செய்யக்கூடிய இந்த என்ஜின் 5 ஸ்பீடு மேனுவல் அல்லது ஆட்டோமேட்டட் மேனுவல் டிரான்ஸ் மிஷன் கியர் பாக்ஸ் உடன் கிடைக்கும்.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0