திருச்சி காஜாமலையில் அரசு கல்லூரி மாணவர் விடுதியில் பதுங்கி இருந்த போதை மாத்திரை கும்பல் சுற்றி வளைப்பு- 5 பேர் கைது - பரபரப்பு தகவல்கள்

Dec 31, 2025 - 21:13
 68
திருச்சி காஜாமலையில்  அரசு கல்லூரி மாணவர் விடுதியில் பதுங்கி இருந்த போதை மாத்திரை கும்பல் சுற்றி வளைப்பு-  5 பேர் கைது - பரபரப்பு தகவல்கள்

திருச்சி காஜாமலையில் அரசு கல்லூரி மாணவர் விடுதியில் பதுங்கி இருந்த போதை மாத்திரை கும்பல் சுற்றி வளைப்பு 5 பேர் கைது பரபரப்பு தகவல்கள்

திருச்சி காஜாமலை பகுதியில் உள்ள அரசு கல்லூரி மாணவர்கள் விடுதியில் போதை மாத்திரை கும்பல் பதுங்கி இருப்பதாக பொன்மலை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனே இன்ஸ்பெக்டர் பெரியசாமி மற்றும் போலீசார் இன்று அதிகாலை அங்கு விரைந்து சென்று அதிரடி சோதனை நடத்தினர். பின்னர் போதை மாத்திரை சப்ளை செய்த சக்திவேல், ஜான் போஸ்கோ, சிவராமன், ஸ்ரீராம், இந்திரன் ஆகிய 5 பேரை கைது செய்து அவர்களிடமிருந்து 200 போதை மாத்திரைகள் அரிவாள், பட்டாக்கத்தி போன்றவற்றை கைப்பற்றினர். கைதான ஐந்து பேரும் கொலை கொள்ளை போன்ற பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்கள். சமூக விரோத கும்பல் அரசு கல்லூரி மாணவர் விடுதியில் பதுங்கி இருந்து கோதை மாத்திரை சப்ளை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த விடுதியில் 150 க்கும் மேற்பட்ட அரசு கல்லூரி மாணவர்கள் தங்கி உள்ளனர். இந்த சமூக விரோத கும்பலுக்கு அடைக்கலம் கொடுத்தது யார்? என விசாரணை நடந்து வருகிறது. மேலும் வெளி நபர்களை விடுதிக்குள் அனுமதித்த விடுதி வார்டன் ஆனந்தனிடம் போலீசார் கிடுக்குப்பிடி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

What's Your Reaction?

Like Like 1
Dislike Dislike 1
Love Love 0
Funny Funny 0
Angry Angry 1
Sad Sad 0
Wow Wow 0