திருச்சியில் நடைபெற்ற தமிழ்நாடு பட்டதாரி - முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் சார்பில் நடை பெற்ற மாநில தேர்தலில் தமிழகம் முழுவதும் புதிய நிர்வாகிகள் தேர்வு
திருச்சியில் தமிழ்நாடு பட்டதாரி - முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் சார்பில் நடை பெற்ற மாநில தேர்தலில் தமிழகம் முழுவதும் புதிய நிர்வாகிகள் தேர்வு
திருச்சியில் உள்ள இ. ஆர் மேல்நிலைப் பள்ளியில் அரசு அங்கிகாரம் பெற்ற தமிழ்நாடு பட்டதாரி-முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் சிறப்பு பொதுக் குழு கூட்டம் மற்றும் அமைப்பிற்கான மாநில தேர்தல் நடைபெற்றது. சிறப்பு பொதுக் குழுவில் சதானந்த கவுடா (General Secretary -AISTF), நரசிம்ம ரெட்டி (Working President AISTF), சிறப்புத்தலைவர் சுப்ரமணியன் (Vice President - AISTF), அமைப்பின் மூத்த நிர்வாகிகள் அருள் சுந்தர ராஜன், காமராஜ் , முன்னாள் மாநில ஒருங்கிணைப்பாளர் A. பீட்டர் ராஜா உள்ளிட்ட முன்னாள் , இன்னாள் நிர்வாகிகள் மற்றும் மாநில பொதுக் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
பின்னர் நடைபெற்ற மாநிலத் தேர்தலில் மாநிலத் தலைவராக திரு கி.மகேந்திரன் (பெரம்பலூர்), மாநில பொதுச் செயலாளராக அ.சுந்தர மூர்த்தி (விழுப்புரம்), மாநில பொருளாளராக வி.எம். கண்ணன் (புதுக்கோட்டை), மாநில அமைப்பு செயலாளராக இராம.அய்யா கண்ணு (திண்டுக்கல்), மாநில துணைத் தலைவர்களாக R.சரவணன், (இராமநாதபுரம்), ஹரி அவர்கள் (கிருஷ்ணகிரி), M. பழனியப்பன் (சிவகங்கை), R.முத்துவேல் (திருவாரூர்), வேலுச்சாமி ( விருதுநகர்). மாநில செயலாளர்களாக K.B. நரசிம்மன்(திருவள்ளூர்), P. குமரவேல் (கடலூர்), S. அலெக்ஸாண்டர்(சேலம்), D. நாகராஜன் ( திருச்சி), A. செல்வகுமார் (அரியலூர்), K. ரகு (திருவண்ணாமலை), R.வினோபா (கன்னியாகுமரி), S.முத்து சிதம்பரம் (மதுரை), கருப்புசாமி (தென்காசி), M. அழகுதுரை (தருமபுரி), K.A. ரமேஷ் (நாகை), சுரேஷ் (சென்னை), மாநில மகளிர் அணி செயலாளர்களாக K. மீனா (சேலம்), ஷைலா (திருச்சி), சாந்தி (திண்டுக்கல்). ஆகியோர் ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். இந்தக் கூட்டத்தில் சங்கத்தின் நிர்வாகிகள் உறுப்பினர்கள் பட்டதாரி ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.
What's Your Reaction?
Like
1
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0