திருச்சி திருவளர்ச்சோலை பகுதியில் அடிப்படை வசதிகள் செய்து தர கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஸ்ரீரங்கம் மாநகராட்சி அலுவலக வளாகத்தில் காத்திருப்பு போராட்டம்

Sep 10, 2025 - 18:33
 56

திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட 6வது வார்டு திருவளர்சோலை பகுதியில் தெருவிளக்கு, சுகாதாரமான குடிநீர், பொதுக்கழிப்பிடம், சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் இன்று ஸ்ரீரங்கம் மாநகராட்சி அலுவலக வளாகத்தில் காத்திருப்பு போராட்டம் நடந்தது. போராட்டத்திற்கு ஸ்ரீரங்கம் பகுதி துணைத்தலைவர் கருணாகரன் தலைமை தாங்கினார். கோரிக்கைகளை விளக்கி மாநகர் மாவட்ட செயலாளர் சிவா, கவுன்சிலர் சுரேஷ், ஏ ஐ எஸ் எப் மாநில தலைவர் இப்ராஹிம், மாநில துணைத்தலைவர் செல்வகுமார், ஏஐடியுசி மாவட்ட பொருளாளர் ராமராஜ், தரைக்கடை சங்க மாவட்ட செயலாளர் அன்சர்தீன், மணிகண்டம் ஒன்றிய செயலாளர் முருகன், ஸ்ரீரங்கம் பகுதி செயலாளர் பார்வதி, மேற்கு பகுதி செயலாளர் சுரேஷ் முத்துச்சாமி ,மாவட்டக்குழு உறுப்பினர் சண்முகம் ஆகியோர் பேசினர்.

இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.பின்னர் உதவி செயற்பொறியாளர் கிருஷ்ணமூர்த்தியுடன் நடந்த பேச்சுவார்த்தையில் கோரிக்கைகள் நிறைவேற்ற தருவது குறித்து எழுத்துப்பூர்வமாக உறுதியளிக்க வேண்டும் என வலியுறுத்தினர். இதையடுத்து மாநகராட்சி இளநிலை பொறியாளர்கள் மற்றும் பணியாளர்கள் திருவளர்ச்சோலை சென்று குறிப்பிட்ட இடத்தை பார்வையிட்டு வந்தனர். பின்னர் கோரிக்கைகள் நிறைவேற்றித் தரப்படும் என எழுத்துப்பூர்வமாக உறுதியளித்தனர். இதையடுத்து காத்திருப்பு போராட்டத்தை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0