திருச்சியில் இளம்பெண் எரித்து கொலை உடலை வாங்க மறுத்து உறவினர்கள் மற்றும் கட்சியினர் திருச்சி அரசு மருத்துவமனை முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் பரபரப்பு

Nov 1, 2025 - 11:57
 343

திருச்சி மாவட்டம் சிறுகனூர் அருகே மீரா ஜாஸ்மின் வயது (22) என்ற இளம் பெண் கொலை செய்து எரிக்கப்பட்ட நிலையில் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்த கொலை திருச்சி மாவட்டத்தில் பரபரப்புக்கு உள்ளாகியது. கொலைக்கு காரணமான குற்றவாளிகளை கைது செய்திட வேண்டும் வன்கொடுமை வழக்கு பதிவு செய்திட வேண்டும் என உடலை வாங்க மறுத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தீண்டாமை ஒழிப்பு முன்னணி, வாலிபர் சங்கம் ,மாதர் சங்கம், மாணவர் சங்கம் மற்றும் உயிரிழந்த பெண்ணின் உறவினர்களோடு

 சாலை மறியல் போராட்டம் நடத்தி காவல்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் இன்னும் ஒரு மணி நேரத்தில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு உங்களுக்கு உரிய தகவல் கொடுப்பதாக சொல்லியதன் பேரில் சாலை மறியல் போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டு தற்பொழுது அரசு மருத்துவமனை வளாகத்தில் காத்திருக்கும் போராட்டம் நடைபெற்று வருகிறது. இதனால் அங்கு பரபரப்பான சூழல் நிலவி வருகிறது

What's Your Reaction?

Like Like 1
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0