அதானி அம்பானி வாங்கிய கோடிக்கணகான கடன்களை தள்ளுபடி செய்து மக்களின் வரிப்பணத்தை வீணாக்குகிறார் ஒன்றிய பிரதமர் நரேந்திர மோடி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உரை

Dec 2, 2025 - 12:48
Dec 2, 2025 - 12:54
 16
அதானி அம்பானி வாங்கிய கோடிக்கணகான கடன்களை தள்ளுபடி செய்து மக்களின் வரிப்பணத்தை வீணாக்குகிறார் ஒன்றிய பிரதமர் நரேந்திர மோடி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உரை

அதானி அம்பானி வாங்கிய கோடிக்கணகான கடன்களை தள்ளுபடி செய்து மக்களின் வரிப்பணத்தை வீணாக்குகிறார் ஒன்றிய பிரதமர் நரேந்திர மோடி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உரை.

துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் 48 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு திருச்சி தெற்கு மாவட்டத்தின் சார்பாக உதயநிதி 48 என்னும் நிகழ்வில் ஏழாவது நிகழ்ச்சியாக திருச்சி தெற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட பொன்மலை பகுதியில் நடைபெற்றது 2026 இல் ஏழாவது முறையாக திமுக ஆட்சி அமையும் என நாம் இந்த நிகழ்வில் மூலம் அனைவரும் உறுதி ஏற்க வேண்டும் என்றும் மேலும் நான் 2016 மற்றும் 2021 இல் தேர்தலில் நின்ற பொழுது எனக்கு வாக்கு சேகரிக்க வந்த துணை முதல்வர் அவர்கள் நான் அன்பில்க்காக ஓட்டு கேட்க வரவில்லை எனக்காக உங்களிடம் ஓட்டு கேட்க வந்திருக்கிறேன்

 என்று கூறியவர் தான் துணை முதல்வர் என்றும் நமது திருவெறும்பூர் தொகுதியில் மாதிரி பள்ளி மற்றும் ஒலிம்பியாட் விளையாட்டு மைதானம் சூரியுர் ஊராட்சியில் ஜல்லிக்கட்டு விளையாட்டு மைதானம் என அமைத்து தந்தவர் தான் தமிழக துணை முதல்வர் என்றும் மேலும் இந்த பொன்மலை பகுதியில் இதுவரை ரூபாய் 42 கோடியே 72 லட்சம் மதிப்பீட்டில் அனைத்து பணிகளும் நடைபெற்று முடிந்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு செயல்படுத்தப்பட்டுள்ளது தான் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் ஆட்சி என்றும் எடுத்துரைத்தார் மேலும் நமது தமிழக முதல்வர் அவர்கள் மக்களின் துயர் தீர்க்கும் வண்ணம் பன்னிரண்டாம் வகுப்பு படித்த மாணவிகள் கல்லூரி படிப்பை தொடர அவர்களுக்கு புதுமைப்பெண் திட்டம் என்னும் திட்டத்தின் மூலம் மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கி வருவதாகவும், மேலும் தாய்மார்கள் பயன்பெறும் வகையில் விடியல் பயணம் மகளிர் உரிமை தொகை என பல்வேறு திட்டங்கள் வகுத்து மக்களுக்காக செயல்படும் ஆட்சி தான் தமிழகத்தில் நடந்து கொண்டிருப்பதாகவும் ஆனால் மக்கள் வரிப்பணத்தை கொள்ளையடித்து அதானி மற்றும் அம்பானியின் கடன்களை தள்ளுபடி செய்து கொண்டிருப்பவர் தான் ஒன்றிய பிரதமர் மோடி

 என்றும் எடுத்துரைத்தார் பாரத பிரதமர் மோடி கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் மக்கள் வங்கி கணக்கில் 15 லட்சம் வழங்கப்படும் என்று கூறினார். ஆனால் இன்று வரை 15 ரூபாய் கூட வழங்கவில்லை எனவும் எடுத்துரைத்தார் எனவே மக்களாகிய அனைவரும் வரும் சட்டமன்றத் தேர்தலில் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் ஆட்சியை வலுப்படுத்த நாம் அனைவரும் பாடுபடுவோம் என உறுதி ஏற்போம் எனவும் எடுத்துரைத்தார்

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0