*திருவெறும்பூர் தொகுதியில் தனது பிரச்சாரத்தை துவங்கிய நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் ஜல்லிக்கட்டு ராஜேஷ், அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு சவால் விடுத்தார்*

Mar 18, 2026 - 22:06
 88
*திருவெறும்பூர் தொகுதியில் தனது பிரச்சாரத்தை துவங்கிய நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் ஜல்லிக்கட்டு ராஜேஷ், அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு சவால் விடுத்தார்*

திருவெறும்பூர் தொகுதியில் தனது பிரச்சாரத்தை துவங்கிய நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் ஜல்லிக்கட்டு ராஜேஷ், அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு சவால் விடுத்தார்:

தமிழக சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெறுவதையொட்டி தேர்தல் களம் பரபரப்பாக உள்ளது. திமுக கூட்டணிகள், அதிமுக கூட்டணிகள், நாதக, தவெக உள்ளிட்ட கட்சிகள் தமிழக தேர்தலுக்கு தயாராகி வருகின்றனர். இந்த நிலையில் முதலில் 234 தொகுதிகளிலும் வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், மற்றும் அக்கட்சி நிர்வாகிகள் தேர்தல் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 இதன் ஒரு பகுதியாக நாம் தமிழர் கட்சியின் திருவெறும்பூர் தொகுதி வேட்பாளராக ஜல்லிக்கட்டு ராஜேஷ் அறிவிக்கப்பட்ட நிலையில், அவர் இன்று திருவெறும்பூர் அருகே உள்ள சூரியூர் கிராமத்தில் தனது பிரச்சாரத்தினை தொடங்கினார். முன்னதாக கோவிலில் வழிபாடு நடத்தி, ஜல்லிக்கட்டு காளைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்து சாஷ்டாங்கமாக வணங்கினார். பின்னர் தனது பிரச்சார வாகனத்தில் சூரியூர் காந்தளூர் ஆகிய கிராம பகுதிகளுக்கு சென்று தங்களுடைய 26 தேர்தல் வாக்குறுதி அடங்கிய துண்டு பிரசுரங்களை வீடு வீடாக சென்று வழங்கி தனது பிரச்சாரத்தை மேற்கொண்டார்.

 இதனிடையே அவர் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது, : மதுரை அலங்காநல்லூர் போல், ஜல்லிக்கட்டுக்கு புகழ்வாய்ந்த சூரியூரில், கடவுளை வணங்கி புனிதமான இந்த மண்ணில் எனது பிரச்சாரத்தை துவங்குகிறேன். 10 ஆண்டுகளாக திமுகவைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினரும் அமைச்சரும் அன்பில் மகேஷ் பொய்யாமொழி எந்தவித வளர்ச்சியும் செய்யவில்லை. பட்ஜெட்டில் அதிக நிதி ஒதுக்கும் துறையாக பள்ளிக்கல்வித்துறை இருந்துள்ளது. இந்த ஐந்து ஆண்டு காலத்தில் கிட்டத்தட்ட நான்கரை லட்சம் ரூபாய் பட்ஜெட் ஒதுக்கி உள்ளார்கள். இந்த பட்ஜெட்டில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக அன்பில் மகேஷ் பொய்யாமொழி தனது தொகுதியில் உள்ள பள்ளிகளுக்கு அவர் செய்தது பூஜ்யம் தான். இந்த தொகுதியில் உள்ள நான்கு அரசு மேல்நிலைப் பள்ளிகளில் விளையாட்டு மைதானம் என்பதே கிடையாது. ஆனால் இந்த தொகுதியில் 50 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து ஒலிம்பிக் அகாடமி மைதானத்திற்கான பணிகள் நடந்து வருகிறது.

 இதன் மூலம் அரசு பள்ளி மாணவர்கள் பயனடைவது என்பது கேள்விக்குறிதான் ? இது தனியார் பள்ளிகளுக்காக உருவாக்கப்படுகிறது. இந்த தொகுதியில் 200 மாணவர்களுக்கு மேல் படிக்கக்கூடிய பள்ளிகளில் முறையான கழிவறை வசதி கிடையாது. இந்த நிலை மாற வேண்டும் என்ற முனைப்போடு மாற்றத்தை நோக்கி பயணிக்கிறோம். கொள்கைகளையும், தத்துவங்களையும் சுமந்து நிற்கும் எங்களுக்கு மக்கள் ஆதரவு இருக்கும் நம்பிக்கையோடு இந்த பிரச்சாரத்தை துவங்குகிறேன். எங்களது தொண்ட அறிக்கையில் 26 வாக்குறுதிகள் அளித்துள்ளோம். நான் சட்டமன்ற உறுப்பினரானால் ஓராண்டுக்குள் தொகுதி மக்களின் நீண்ட கால பிரச்சனையானா சர்வீஸ் சாலை அமைக்கப்படும், அதே போல் 2 ஆண்டுக்குள் அரியமங்கலம் குப்பை கிடங்கை அகற்றப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். என்னை போல் பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக இருக்கக்கூடிய அன்பின் மகேஷ் பொய்யாமொழி குறிப்பிட்ட காலத்திற்குள் இந்த கோரிக்கையை அவர் நிறைவேற்றுவாரா? சவால் விடுகிறேன். சாவல் விட்டு சொல்கிறேன் ,நான் வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினரானால் குறிப்பிட்ட காலத்திற்குள் இந்த கோரிக்கையை நிறைவேற்றுவேன். அவ்வாறு என்னால் நிறைவேற்ற முடியாவிட்டால் நான் மக்கள் முன்பு சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்கிறேன் என தெரிவித்தார்.

What's Your Reaction?

Like Like 1
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 1