*திருச்சி மேல கல்கண்டார் கோட்டை விவேகானந்தா நகர் மெயின் ரோட்டில் இருந்த வேகத்தடை திடீர் மாயம்- திமுக நிர்வாகிகள் தான் காரணம் என பொதுமக்கள் குற்றச்சாட்டு- பெரும் விபத்து நடப்பதற்கு முன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு பொதுமக்கள் கோரிக்கை*

Dec 2, 2025 - 16:18
 151
*திருச்சி மேல கல்கண்டார் கோட்டை விவேகானந்தா நகர் மெயின் ரோட்டில் இருந்த வேகத்தடை திடீர் மாயம்- திமுக நிர்வாகிகள் தான் காரணம் என பொதுமக்கள் குற்றச்சாட்டு- பெரும் விபத்து நடப்பதற்கு முன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என  அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு பொதுமக்கள் கோரிக்கை*
அமைச்சர் பிறந்தநாள் பேனரும் அதன் அருகில் இருந்த வேகத்தடை அகற்றப்பட்டிருப்பதை படத்தில் காணலாம்

திருச்சி மேல கல்கண்டார் கோட்டை விவேகானந்தா நகர் மெயின் ரோட்டில் இருந்த வேகத்தடை திடீர் மாயம் திமுக நிர்வாகிகள் தான் காரணம் என பொதுமக்கள் குற்றச்சாட்டு- அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

திருச்சி மேல கல்கண்டார் கோட்டை விவேகானந்தா நகர் மெயின் ரோட்டில் இருந்து வெங்கடேஸ்வரா நகர் பூங்கா ரோட்டிற்கு திரும்பும் இடத்தில் ஒரு வேகத்தடை இருந்தது அந்த இடத்தில் விபத்து நடக்கும் என்பதால் வேகத்தடை அமைக்கப்பட்டிருந்தது இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு அந்த வேகத்தடை காணாமல் போயிருந்தது இது குறித்து அருகில் உள்ளவர்களிடம் விசாரித்த பொழுது அந்த வேகத்தடையை அப்பகுதியை சேர்ந்த திமுக நிர்வாகிகள் அமைச்சர் பிறந்த நாளை முன்னிட்டு அந்த இடத்தில் பிளக்ஸ் பேனர் வைப்பதற்காக குழி தோண்டுவதற்காக ஜேசிபி வாகனம் வரவழைத்து குழி தோண்ட முயன்ற போது வேகத்தடையையும் அகற்றி உள்ளனர். மேலும் அந்த இடத்தில் குழி தோண்டி கான்கிரீட் கலவை போட்டு கம்பம் ஊன்றி நிரந்தர பிளக்ஸ் பேனர் வைப்பதற்காக முயற்சித்து வரும் நிலையில் அப்பகுதியை சேர்ந்த  வேறு சில கட்சி நிர்வாகிகளும் நாங்களும் இதே இடத்தில் நிரந்தரமாக ப்ளெக்ஸ் பேனர் வைக்கப் போகிறோம் என்று கூறி வருகின்றனர். இதனால் இந்த இடத்தில் தற்பொழுது சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்பட வாய்ப்பு உள்ளது அந்த இடத்தில் நிரந்தரமாக பிளக்ஸ் பேனர் வைப்பதற்கு யார் அனுமதி அளித்தது மாநகராட்சி நிர்வாகமா? மாநகராட்சி நிர்வாகம் என்றால் தொகுதி அமைச்சர் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அல்ல திமுக நிர்வாகிகள் என்றால் திமுக நிர்வாகிகள் மீது தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். உடனடியாக அந்த பிளக்ஸ் பேனரை அகற்றி அகற்றப்பட்ட வேகத்தடையை உடனே போட வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படுவதற்கு முன்  பொன்மலை போலீசாரும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 1
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0