*திருச்சி திருவெறும்பூர் காந்தி நகரில் ஜனநாயக வாலிபர் சங்கம் மற்றும் மாதர் சங்கம் இணைந்து சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது*
ஜனநாயக வாலிபர் சங்கம் மற்றும் மாதர் சங்கம் இணைந்து சமத்துவ பொங்கல் விழா
சாதி, மத பேதங்களைக் கடந்து மக்கள் ஒற்றுமையும் மனித நேயத்தையும் காத்திடும் நோக்குடன் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மற்றும் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் இணைந்து நடத்திய சமத்துவ பொங்கல் விழா திருச்சி மாநகர் திருவெறும்பூர், காந்தி நகர் 3ஆம் தெருவில் சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்விற்கு இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட பொருளாளர் தோழர் சந்தோஷ் மற்றும் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க மாவட்ட குழு உறுப்பினர் தோழர் நிவேதா ஆகியோர் தலைமை தாங்கினர்.
விழாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் தோழர் கோவி. வெற்றிசெல்வம், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட செயலாளர் தோழர் எஸ். ரேணுகா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர் தோழர் பா. லெனின், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க மாவட்ட செயலாளர் தோழர் எஸ். சரஸ்வதி, மாதர் சங்க மாவட்ட பொருளாளர் தோழர் மாலதி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். மேலும், நூர் பள்ளிவாசல் ஜமாத் தலைவர் தீன் மற்றும் ஜமாத்தார்கள், குழந்தை இயேசு ஆலயத்தின் சிறிய பங்கு தந்தை மற்றும் ஆலய நிர்வாகிகள் ஆரோக்கியசாமி, அருள்மேரி, காந்தி நகர் முத்துமாரியம்மன் கோயில் நிர்வாகிகள் அமித் குமார், சூரி உள்ளிட்ட மூன்று மதங்களைச் சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்று சமத்துவத்தின் அவசியத்தை வலியுறுத்தினர். இதில் மாதர் சங்க மூத்த தோழர்கள் தவ்லத் பாண்டியன், ஜான்சி ராணி, சசிகலா, திவ்யா மற்றும் வாலிபர் சங்க நிர்வாகிகள் யுவராஜ், செல்வம், அஜீத் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மூன்று மதத்தினரும் ஒன்றிணைந்து ஒரே பானையில் பொங்கல் வைத்து, சாதி – மத பேதமற்ற சமூகத்தை உருவாக்கும் உறுதியுடன் சமத்துவ பொங்கல் விழா சிறப்பாக நடைபெற்றது.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0