*திருச்சியில் டெல்டா கேனல் அமைப்பு சார்பில் சிவி சுதர்சன் நினைவை முன்னிட்டு இந்திய இன சிறப்பு நாய்கள் கண்காட்சி நடைபெற்றது*

Feb 23, 2026 - 15:07
 7
*திருச்சியில் டெல்டா கேனல் அமைப்பு சார்பில் சிவி சுதர்சன் நினைவை முன்னிட்டு இந்திய இன சிறப்பு நாய்கள் கண்காட்சி நடைபெற்றது*

திருச்சியில் இந்திய இன சிறப்பு நாய் கண்காட்சி நடைபெற்றது - ஏராளமான நாய்கள் பங்கேற்பு

டெல்டா கெனல் கிளப் அமைப்பு சார்பில் சி.வி. சுதர்சன் நினைவு 3வது திறந்த நாய் கண்காட்சி & இந்திய இன நாய் சிறப்பு கண்காட்சி – 2026” காஜா மியான் பள்ளி மைதானத்தில் நடைபெற்றது. இந்த மாநில அளவிலான போட்டியில் தமிழ்நாடு முழுவதும் இருந்து 170-க்கும் மேற்பட்ட நாய்கள் பங்கேற்றன. 

பல்வேறு சர்வதேச மற்றும் இந்திய இன நாய்கள் கலந்து கொண்டு தரம், கட்டுப்பாடு மற்றும் இனத் தன்மைகளை வெளிப்படுத்தின. இந்த கண்காட்சி நாய் வளர்ப்பு துறையில் முக்கிய பங்களிப்பு செய்த மறைந்த திரு. சி.வி. சுதர்சன் அவர்களின் நினைவாக நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் திருச்சிராப்பள்ளி மாநகராட்சியுடன் இணைந்து ரேபீஸ் ப்ரீ திருச்சி என்ற பொதுமக்கள் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் நாய் உரிமையாளர்களுக்கு ரேபீஸ் நோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

 இதன் மூலம் செல்லப்பிராணிகளுக்கு தவறாமல் ரேபிஸ் தடுப்பூசி செலுத்துதல், தெருநாய்களுக்கு தடுப்பூசி மற்றும் இனப்பெருக்க கட்டுப்பாடு, பொறுப்பான செல்லப்பிராணி பராமரிப்பு போன்ற அம்சங்கள் வலியுறுத்தப்பட்டன. இந்த நாய் கண்காட்சியில் நீதிபதியாக ரஞ்சீத் சிங் முன்ஜால் ஆகியோர் பங்கேற்றார். சிறப்பு விருந்தினராக டாக்டர்.ராஜவேல், டாக்டர்.விஸ்வநாதன், கிளெமென்ட் ராஜ், அருண் ராஜா, அபு ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சி மூலம் இந்திய இன நாய்களின் பாதுகாப்பு, பொறுப்பான இனப்பெருக்கம் மற்றும் நகர அளவில் ரேபிஸ் கட்டுப்பாட்டை வலுப்படுத்தும் முயற்சியாக அமைந்தது என நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0