*திருச்சி புறநகர்  தெற்கு மாவட்டம் சார்பில் புரட்சித்தலைவி அம்மாவின் பிறந்த நாள் விழா- பழக்கடை ராஜேஷ் தலைமையில் அம்மாவின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி  மரியாதை*

Feb 24, 2026 - 12:21
Feb 24, 2026 - 12:30
 9
*திருச்சி புறநகர்  தெற்கு மாவட்டம் சார்பில் புரட்சித்தலைவி அம்மாவின் பிறந்த நாள் விழா- பழக்கடை ராஜேஷ் தலைமையில் அம்மாவின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி  மரியாதை*

திருச்சி புறநகர் தெற்கு மாவட்டம் சார்பில் புரட்சித்தலைவி அம்மாவின் பிறந்த நாள் விழா- பழக்கடை ராஜேஷ் தலைமையில் அம்மாவின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை

தமிழகத்தில் பொற்கால ஆட்சியை நடத்தி ஏழை எளிய மக்களின் வாழ்விற்கு வழிகாட்டியாய் வாழ்ந்து மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் புரட்சித்தலைவி அம்மாவின் 78 ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா இன்று வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. 

திருச்சி புறநகர் தெற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த புரட்சித்தலைவி அம்மாவின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்து பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாடப்பட்டது. 

இதன் ஒரு பகுதியாக மாவட்ட கலைப்பிரிவு துணைச்செயலாளர் பழக்கடை ராஜேஷ் தலைமையில் பொன்மலை சந்தை அருகே அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த புரட்சித்தலைவி அம்மாவின் திரு உருவப்படத்திற்கு பகுதி செயலாளர் பாலசுப்பிரமணியன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டு அம்மாவின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். பின்னர் வந்திருந்த அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0