*திருச்சியில் 33 வயது பெண்ணின் மூளையிலிருந்து டென்னிஸ் பந்து அளவு கட்டியை அகற்றி கியூரிஸ் வேலன் மருத்துவமனை சாதனை!- பெண்ணிற்கு புது வாழ்வை அளித்த மருத்துவமனைக்கு குவியும் பாராட்டுகள்*
திருச்சியில் 33 வயது பெண்ணின் மூளையிலிருந்து டென்னிஸ் பந்து அளவு கட்டியை அகற்றி கியூரிஸ் வேலன் மருத்துவமனை சாதனை!
திருச்சி ஜெயில் கார்னர் பகுதியில் அமைந்துள்ள கியூரிஸ் வேலன் மருத்துவமனையில், காது மற்றும் முக நரம்புகளைப் பாதித்திருந்த டென்னிஸ் பந்து அளவிலான ஆபத்தான மூளைக் கட்டியை, மருத்துவர்கள் குழுவினர் 6 மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு வெற்றிகரமாக அகற்றி சாதனை படைத்துள்ளனர். சமீபத்தில் 33 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர், தனது முகத்தின் ஒரு பகுதியில் தொடர்ச்சியான துடிப்பு ஏற்படுவதாகவும், நாளுக்கு நாள் காது கேட்கும் திறன் குறைந்து வருவதாகவும் கூறி கியூரிஸ் வேலன் மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக வந்துள்ளார். அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவரது மூளைக்குள் சிறுமூளையை பலமாக அழுத்தியபடி டென்னிஸ் பந்து அளவுக்குப் பெரிய கட்டி ஒன்று வளர்ந்திருப்பதை கண்டறிந்தனர். இக்கட்டியானது காது மற்றும் முகத்திற்குச் செல்லும் முக்கிய நரம்புகளை அழுத்திக் கொண்டிருந்ததால், உயிருக்கு ஆபத்து ஏற்படும் முன்பு உடனடியாக அறுவை சிகிச்சை செய்தாக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, மூளை நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் ஹரிஹரசுதன் தலைமையில் ஒரு சிறப்பு குழு அமைக்கப்பட்டு, அறுவை சிகிச்சை மோல் கட்டி மெதுவான முறையில் அகற்றப்பட்டது. மூத்த மயக்கவியல் நிபுணர் டாக்டர் ராம்கோபால் மற்றும் அவரது குழுவினர் இந்தச் சவாலான நிலையில் துல்லியமாகக் கையாண்டு மயக்க மருந்து வழங்கினர். சுமார் 6 மணி நேரம் இடைவிடாமல் நீடித்த இந்தச் சவாலான அறுவை சிகிச்சையில், கட்டியின் 90 சதவீதம் வெற்றிகரமாக அகற்றப்பட்டது. இது குறித்த செய்தியாளர் சந்திப்பு மருத்துவமனை வளாகத்தில் இன்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட டாக்டர் ஹரிஹரசுதன் கூறுகையில்:- மூளைக்குள் இத்தகைய கட்டிகள் எவ்வாறு உருவாகின்றன என்பதைக் கண்டறிவதே சவாலானது. தற்போது அறுவை சிகிச்சைக்குப் பிறகு நோயாளி பூரண நலமுடன் இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளார் என்றார். தொடர்ந்து மயக்கவியல் நிபுணர் டாக்டர் ராம்கோபால் கூறுகையில்:- தலைகுப்புறப் படுக்க வைத்து மூளையைத் திறந்து செய்யும் இந்த அறுவை சிகிச்சையில் சரியான அளவில் மயக்க மருந்து கொடுப்பது மிகவும் நுட்பமானது; அது தற்போது சிறப்பாக நிறைவேற்றப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார். கியூரிஸ் வேலன் மருத்துவமனையின் மண்டல தலைமை அதிகாரி அஸ்வதி கூறுகையில்:- தில்லை நகர் மற்றும் திருவானைக்காவல் கிளைகளைத் தொடர்ந்து ஜிகார்னர் பகுதியில் இயங்கி வரும் கியூரிஸ் வேலன் 'சூப்பர் ஸ்பெஷாலிட்டி' மருத்துவமனை நவீன வசதிகளுடன் 24 மணி நேரமும் செயல்பட்டு வருவதால்தான் இத்தகைய மாபெரும் சாதனையை சாத்தியப்படுத்த முடிந்தது என்றார். இந்த செய்தியாளர் சந்திப்பின் போது மருத்துவர்கள் தேம்பவாணி, கார்த்திகா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
1