*திருச்சி புனித வளனார் கல்லூரி முன்னாள் மாணவரும் மறைந்த ஜனாதிபதியுமான ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்களுக்கு நினைவஞ்சலி செலுத்திய கல்லூரி முதல்வர் பேராசிரியர்கள் மாணவர்கள்*

Jul 28, 2026 - 15:37
 5
*திருச்சி புனித வளனார் கல்லூரி முன்னாள் மாணவரும் மறைந்த ஜனாதிபதியுமான ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்களுக்கு நினைவஞ்சலி செலுத்திய கல்லூரி முதல்வர் பேராசிரியர்கள் மாணவர்கள்*

திருச்சி புனித வளனார் கல்லூரி முன்னாள் மாணவரும் மறைந்த ஜனாதிபதியுமான ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்களுக்கு நினைவஞ்சலி செலுத்திய கல்லூரி முதல்வர் பேராசிரியர்கள் மாணவர்கள்.

திருச்சியில் உள்ள புனித வளனார்( ஜோசப் காலேஜ்) கல்லூரியில், 1954ஆம் ஆண்டு அவர் பயின்று, கல்லூரிக்கு பெருமை சேர்த்த வகையில், வருடம் தோறும் அவரது நினைவு நாளை, கல்லூரியில் சிறப்பாக நினைவு தினம் சிறப்பாக கொண்டாடப்படுகிறது இன்று அவரது நினைவு நாளையொட்டி, கல்லூரியில் உள்ள அரங்கில், அவரது நினைவு நாள் கல்லூரி அதிபர் பவுல்ராஜ்மைக்கேல் தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக, திருச்சிராப்பள்ளி மண்டலக் கல்லூரிக்கல்வி இணை இயக்குநர் முனைவர் ராதாகிருஷ்ணன், கலந்து கொண்டு மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் அவர்களின் மனித நேயம், அறிவியல் ஞானம், மருத்துவ ஞானம், மாணவர்களின் ஊக்குவிப்பு ஆகிய பெருமைகளை எடுத்துரைத்தார். இந்நிகழ்வில் கல்லூரி செயலர் ஆரோக்கியசாமி, சேவியர் கல்லூரி முதல்வர் ஆரோக்கியம், இணை முதல்வர் குமார், இயற்பியல் துறை தலைவர், ஜான்சன் ஆகியோர் அப்துல் கலாம் பற்றி சிறப்புரை ஆற்றினார்கள் நிகழ்வில் கல்லூரி மாணவ மாணவிகள் திரளாக பங்கேற்று அப்துல் கலாம் நினைவு நாள் விழாவை சிறப்பித்தனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0