திருச்சி சீதாலக்ஷ்மி ராமஸ்வாமி கல்லூரியில் பவள விழா ஆண்டின் சிறப்பு நிகழ்வாக உலக ஓசோன் தினத்தை முன்னிட்டு மாபெரும் மனிதச்சங்கிலி பேரணி திருச்சி காவேரி பாலத்தில் நடைபெற்றது

Sep 17, 2025 - 10:41
 30
திருச்சி சீதாலக்ஷ்மி ராமஸ்வாமி கல்லூரியில் பவள விழா ஆண்டின் சிறப்பு நிகழ்வாக உலக ஓசோன் தினத்தை முன்னிட்டு மாபெரும் மனிதச்சங்கிலி பேரணி திருச்சி காவேரி பாலத்தில் நடைபெற்றது

திருச்சி சீதாலக்ஷ்மி ராமஸ்வாமி கல்லூரியில் பவள விழா ஆண்டின் சிறப்பு நிகழ்வாக உலக ஓசோன் தினத்தை முன்னிட்டு மாபெரும் மனிதச்சங்கிலி பேரணி திருச்சி காவேரி பாலத்தில் நடைபெற்றது.

உலக ஓசோன் தினத்தில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் புவி வெப்பமயமாதல் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துகின்ற வகையில் நடைபெற்ற இந்த மாபெரும் மனிதச்சங்கிலி பேரணியினை ஸ்ரீரங்கம் கோட்ட காவல்துறை உதவி ஆணையர் சீதாராமன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். நிகழ்விற்கு கல்லூரி முதல்வர் முனைவர் அல்லி, சுயநிதிப்பிரிவுப் பொறுப்பாளர் சாந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும் இந்நிகழ்வில் கல்லூரி பேராசிரியர்கள், மாணவிகள் என 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு ஓசோன் படல பாதிப்பைப் பற்றி பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

 

பின்னர் சீதாலக்ஷ்மி ராமஸ்வாமி கல்லூரி முதல்வர் மருத்துவர் அல்லி செய்தியாளர்களிடம் பேசுகையில்,.... சீதாலட்சுமி ராமசாமி கல்லூரி சார்பில் நடந்த இந்த விழிப்புணர்வு மனித சங்கிலியில் ஓசோன் படலம் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதில் 300க்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்து கொண்டனர். இயற்கை பேரழிவு காரணமாக ஓசோன் படலத்திற்கு ஏற்படும் பாதிப்பு காரணமாக பொதுமக்களுக்கு பல்வேறு இன்னல்கள் ஏற்படுகிறது. இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக இன்று இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. மரம் வளர்ப்பது பிளாஸ்டிக் பொருட்களை தவிர்ப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது என தெரிவித்தார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0