திருச்சி மாநகராட்சி மண்டலம் - 5 க்குட்பட்ட வார்டுகளில் ரூ 36 லட்சத்தில் வளர்ச்சி திட்ட பணிகள் மண்டல குழு தலைவர் விஜயலட்சுமி கண்ணன் தலைமையில் நடந்த கூட்டத்தில் தீர்மானம்
திருச்சி மாநகராட்சி மண்டலம் - 5 ன் வார்டு குழு கூட்டம் மண்டல குழு தலைவர் விஜயலட்சுமி கண்ணன் தலைமையில் நடந்தது
திருச்சி மாநகராட்சி மண்டலம் - 5 க்குட்பட்ட வார்டுகளில் ரூ 36 லட்சத்தில் வளர்ச்சி திட்ட பணிகள் மண்டல குழு தலைவர் விஜயலட்சுமி கண்ணன் தலைமையில் நடந்த கூட்டத்தில் தீர்மானம்
திருச்சி மாநகராட்சி பொதுநிதியின் கீழ் ரூபாய் 49.90 லட்சம் மதிப்பீட்டில் புத்தூர் மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி வளாகத்தில் மண்டலம்-5 வார்டு குழு கூட்ட அரங்கம் கட்டப்பட்டது.இந்த அரங்கத்தை நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு திறந்து வைத்தார். அதன் பிறகு புது கூட்ட அரங்கில் முதலாவது கூட்டமாக இன்று மண்டலம் 5 -ன் வார்டு குழு கூட்டம் மண்டலக் குழுத் தலைவர் விஜயலட்சுமி கண்ணன் தலைமையில் இன்று நடைபெற்றது. உதவி ஆணையர் சென்னு கிருஷ்ணன், உதவி செயற் பொறியாளர் இப்ராஹிம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் மாமன்ற உறுப்பினர்கள் கே.எஸ். நாகராஜன், கமால் முஸ்தபா, ராமதாஸ், முத்துக்குமார், விஜயாஜெயராஜ், நாகலட்சுமி நம்பி, பங்கஜம் மதிவாணன், விஜயலட்சுமி சரவணன், பைஸ் அகமது, சுரேஷ்குமார், சோபியா விமலா ராணி மற்றும் நிர்வாக அலுவலர் துரை,உதவி வருவாய் அலுவலர் தாமோதரன், இளநிலை பொறியாளர்கள் ரமேஷ், சகாயம், சந்திரசேகர், பாலமுருகன், சுகாதார அலுவலர் இளங்கோவன், சுகாதார ஆய்வாளர்கள் ஆல்பர்ட் ,சந்தோஷ்குமார்,ரேவதி,சூர்யா, ஆன்ட்ரு ரெனால்டு மற்றும் மாநகராட்சி அலுவலர்கள், அரசு அலுவலர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.மேலும் புதிதாக தேர்வு செய்யப்பட்ட 5 தொழில்நுட்ப உதவியாளர்களும் கூட்டத்தில் கலந்து கொண்டனர். கூட்டத்தில், மண்டலம் ஐந்துக்குட்பட்ட வார்டுடுகளுக்கு 36 லட்சத்தில் வளர்ச்சி பணிகள் மேற்கொள்வது,வார்டு 26-ல் திறந்தவெளி நூலகம் அமைப்பது,வார்டு 11,24, 55 -ல் தெரு விளக்குகள் அமைக்க மின்வாரியத்திற்கு பணம் செலுத்துவது உள்பட 8 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0