ஆயுத பூஜையை முன்னிட்டு திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனையில் உள்ள பிரமாண்டமான இயந்திரங்களை ஆர்வமுடன் சுற்றிப் பார்த்த பொதுமக்கள் மற்றும் ஊழியர்களின் குடும்பங்கள்

Sep 30, 2025 - 21:43
Sep 30, 2025 - 21:59
 191
ஆயுத பூஜையை முன்னிட்டு திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனையில் உள்ள பிரமாண்டமான இயந்திரங்களை ஆர்வமுடன் சுற்றிப் பார்த்த பொதுமக்கள் மற்றும் ஊழியர்களின் குடும்பங்கள்

ஆயுத பூஜையை முன்னிட்டு திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனையை ஆர்வமுடன் சுற்றிப் பார்த்த பொதுமக்கள் மற்றும் ஊழியர்களின் குடும்பங்கள்

திருச்சி பொன்மலையில் மத்திய அரசு பொதுத்துறை நிறுவனமான ரயில்வே பணிமனை இயங்கி வருகிறது. இங்கு நான்காயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். ரயில்வே பணிமனையில் ஆண்டுதோறும் ஆயுத பூஜையை முன்னிட்டு சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி நேற்று பணிமனைகளில் உள்ள இயந்திரங்கள், இயந்திரங்களின் உதிரி பாகங்கள் ஆகியவை சுத்தம் செய்யப்பட்டு பணிமனையில் உள்ள ஒவ்வொரு பகுதியிலும் தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களை சார்ந்தவர்கள் பூஜைகள் செய்தனர்.

 அதன் பின்னர் பணிமனைகளை சுற்றி பார்க்க நேற்று ஒரு நாள் ரயில்வே நிர்வாகம் அனுமதி கொடுத்ததின் பேரில் ரயில்வே ஊழியர்களின் குடும்பங்கள் மற்றும் பொதுமக்கள் பணிமனையை சுற்றிப் பார்த்து ஆர்வமுடன் ரசித்து கண்டு சென்றனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 2
Sad Sad 0
Wow Wow 0