திருவெறும்பூர் அருகே உள்ள பத்தாளப்பேட்டையில் பட்டப்பகலில் மளிகை கடை சுவற்றில் ஓட்டையை போட்டு கல்லா பெட்டியில் இருந்த பணத்தை கொள்ளை அடித்த மர்ம நபர்களை திருவெறும்பூர் போலீசார் தேடி வருகின்றனர்

Nov 24, 2025 - 20:43
 169
திருவெறும்பூர் அருகே உள்ள பத்தாளப்பேட்டையில் பட்டப்பகலில் மளிகை கடை சுவற்றில் ஓட்டையை போட்டு கல்லா பெட்டியில் இருந்த பணத்தை கொள்ளை அடித்த மர்ம நபர்களை திருவெறும்பூர் போலீசார் தேடி வருகின்றனர்
மளிகை கடையில் கல்லாப்பெட்டி அருகில் துளையிடப்பட்ட பகுதி

திருவெறும்பூர் அருகே உள்ள பத்தாளப்பேட்டையில் பட்டப்பகலில் மளிகை கடை சுவற்றில் ஓட்டையை போட்டு கல்லா பெட்டியில் இருந்த பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்

திருவெறும்பூர் அருகே பத்தாளப்பேட்டை மாதா கோவில் தெருவில் சூசை மளிகை கடை உள்ளது. இந்த மளிகை கடையை குடும்பமாக நடத்தி வருகின்றனர்இதில் கடையில் இருந்த நம்பிக்கை மேரி என்பவர் வழக்கமாக மதியம் கடையை பூட்டிவிட்டு மாலை வந்து கடையை மீண்டும் திறப்பது வழக்கம் அதுபோல் இன்று மதியம் 2 மணி அளவில் கடையை பூட்டி விட்டு மாலை சுமார் 5மணி அளவில் வந்து கடையை திறந்து பார்த்த பொழுது கடையின் கல்லாப்பெட்டி இருக்கும் பகுதியில் உள்ள சுவற்றில் துளையிடப்பட்டிருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் பின்னர் மேலும் கடையில்  பார்த்தபொழுது கடை கல்லாப்பெட்டியில் இருந்த 12 ஆயிரம் ரூபாய்  திருடி சென்று இருப்பது தெரியவந்தது அதன் அடிப்படையில் நம்பிக்கை மேரி உடனடியாக திருவெறும்பூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளார். அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருவெறும்பூர் போலீசார் சுவற்றில் ஓட்டை போட்டு கல்லாப்பெட்டியில் கொள்ளை அடித்த பகுதியை பார்வையிட்டனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர். பட்ட பகலில் ஆட்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் திருடி சென்ற இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

What's Your Reaction?

Like Like 1
Dislike Dislike 0
Love Love 1
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 1
Wow Wow 0