அகில இந்திய தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் திருச்சியில் நடைபெற்றது- திரளான தொழிலாளர்கள் பங்கேற்பு

Nov 26, 2025 - 19:21
 7
அகில இந்திய தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் திருச்சியில் நடைபெற்றது- திரளான தொழிலாளர்கள் பங்கேற்பு

2025-11-26

அகில இந்திய அளவிலான தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் திருச்சியில் நடைபெற்றது.

இந்திய நாட்டின் விவசாயிகளை, தொழிலாளர்களை ,மக்களை காக்க.... பொதுத்துறை நிறுவனங்களையும், பொதுச் சேவைகளையும் தனியார் மயமாக்குவதை எதிர்த்து மக்களை காப்போம்- நாட்டை காப்போம் என்னும் முழக்கத்துடன் வாக்குரிமையை பறிக்கும் தேர்தல் ஆணையத்தின் சிறப்பு தீவிர திருத்தம் (SIR)திரும்ப பெற வேண்டும், தொழிலாளர்களை அடிமைப்படுத்தும் நான்கு தொழிலாளர் சட்ட தொகுப்புகளாக அமலுக்கு வரும் என்ற அறிவிப்பையும் சட்டத் தொகுப்புகளையும் உடனே திரும்ப பெறக்கோரி நாடு முழுவதும் அனைத்து தொழிற்சங்க ஐக்கிய விவசாயிகள் முன்னணி கூட்டு இயக்க ஆர்ப்பாட்டம் திருச்சியில் 26.11.2025 புதன் காலை 10.30 மணியளவில் ராமகிருஷ்ணா தியேட்டர் மேம்பாலம் அருகில் தொமுச பேரவை தலைவர் குணசேகரன் தலைமையில் நடைபெற்றது .ஏஐடியுசி சார்பில் க.சுரேஷ் சிஐடியுசி ரங்கராஜன் ஏஐசிசிடியூ ஞானதேசிகன் ஹெச்எம்எஸ் ஜான்சன் யூடியூசி சிவச்செல்வன் எல்எல்எப் விஜய பாலு ஐஎன்டியூசி அலெக்ஸ் தொமுச ராமலிங்கம் மற்றும் ஐக்கிய விவசாயிகளுக்கு முன்னணி ஒருங்கிணைப்பாளர் சிவ சூரியன்,முகமது அலி,ராஜ்குமார், செழியன் உள்ளிட்டோர் உரையாற்றினர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0