*திருச்சி மாவட்டத்தில் தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கான மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள தமிழ்நாடு தனியார் ஆசிரியர் மன்றம் அழைப்பு*

Jan 9, 2026 - 10:51
 309
*திருச்சி மாவட்டத்தில் தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கான மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள தமிழ்நாடு தனியார் ஆசிரியர் மன்றம் அழைப்பு*

திருச்சி மாவட்டத்தில் தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கான மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள தமிழ்நாடு தனியார் ஆசிரியர் மன்றம் அழைப்பு

திருச்சி, ஐன -11 ம் தமிழ்நாடு தனியார் ஆசிரியர் மன்றம் சார்பில்,வருகின்ற ஞாயிற்றுக்கிழமை 11-01 -2026-அன்றைய தினம் திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகில் உள்ள செயின்ட் ஜோசப் மேல்நிலைப்பள்ளியில் காலை, 9.00-மணி முதல்,மாலை,2:00- மணி வரையில் வேலைவாய்ப்பு முகாம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது முற்றிலுமாக ஆசிரியருக்கான சிறப்பு முகாம் என்பதனால், .ஆசிரியர் பயிற்சி பெற்ற பட்டதாரிகள், முதுநிலை பட்டதாரிகள், உடற்கல்வி ஆசிரியர்கள்,என ஆண், பெண், இருபாலரும் தங்களது கல்விச்சான்றுடன் கலந்து கொண்டு வேலைவாய்ப்பு பெறலாம். இந்த முகாமில் பங்கேற்க வயது வரம்பில்லை.... இந்த வேலை வாய்ப்பு முகாமில் 50 க்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகள் நேரடியாக கலந்து கொண்டு ஆசிரியர்களை தேர்வு செய்கின்றார்கள். எனவே, ஆசிரியர்கள் அதிகளவில் பங்கேற்று இம்முகாமினை பயன்படுத்தி வேலைவாய்ப்பைப்பெறலாம் என, தெரிவிக்கப் பட்டுள்ளது.

What's Your Reaction?

Like Like 2
Dislike Dislike 1
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 1
Wow Wow 0