*திருச்சி திருவெறும்பூர் அருகே காட்டூர் புனித அந்தோனியார் ஆலயத்தில் சமத்துவ பொங்கல் விழா சமூக நல்லிணக்க விழாவாக நடைபெற்றது*

Jan 19, 2026 - 23:00
 21
*திருச்சி திருவெறும்பூர் அருகே காட்டூர் புனித அந்தோனியார் ஆலயத்தில் சமத்துவ பொங்கல் விழா சமூக நல்லிணக்க விழாவாக நடைபெற்றது*

திருச்சி காட்டூர் புனித அந்தோனியார் ஆலயத்தில் சமத்துவ பொங்கல் விழா சமூக நல்லிணக்க விழாவாக நடைபெற்றது

புனித அந்தோனியார் ஆலய  பங்குத்தந்தை ஆரோக்கிய சுந்தர்ராஜ் அவர்கள் தலைமையில் பங்கு நிர்வாகிகள் முன்னிலையில் நடைபெற்றது. விழாவில் காட்டூர் முருகன் கோவில் நிர்வாகி வடிவேல், பர்மா காலனி ரஹ்மானியா பள்ளிவாசல் தலைமை இமாம் மன்பயி, துணைச் செயலாளர் சரிப் , ஆலோசகர் எஸ்எஸ் ரஹ்மத்துல்லா காவேரி நகர் பிள்ளையார் கோயில் நிர்வாகிசெல்வராஜ்,நிர்வாகி மதியழகன்,தெற்கு காட்டூர் பிலால் பள்ளிவாசல் தலைமை இமாம் சதாம் பாயாசி, தலைவர் முகமது இக்பால், வடக்கு காட்டூர்பவானி மாரியம்மன் கோயில் நிர்வாகி சக்திவேல்மற்றும் நிர்வாகிகள்,சதாம் ,நூருல் அமீன்,ஸ்டாலின் பங்கு நிர்வாகிகள்கலந்து கொண்டு சிறப்பித்தனர். நிகழ்ச்சியில்சபைகுழுவினர்கள்,சிலம்பாட்டம், ஒயிலாட்டம்,நாட்டுப்புற நடனங்கள்,போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள்நடத்தப்பட்டுசமத்துவ பொங்கல் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.விழா முடிவில் கலந்து கொண்ட அனைவருக்கும்பொங்கல் வழங்கப்பட்டது.விழாவில் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

What's Your Reaction?

Like Like 1
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0