திமுகவினர் வேலி அமைத்து ஆக்கிரமிப்பு செய்வதற்காக கல்லுகளை ஊன்றியதால் பொதுமக்கள் ஆத்திரம்- போராட்டம் நடத்தப் போவதாக அறிவிப்பு
திமுகவினர் வேலி அமைத்து ஆக்கிரமிப்பு செய்வதற்காக கல்லுகளை ஊன்றியதால் பொதுமக்கள் ஆத்திரம்- போராட்டம் நடத்தப் போவதாக அறிவிப்பு
திருச்சி பொன்மலை 45வது வார்டு பொன்னேரிபுரத்தில் நெடுஞ்சாலைத் துறைக்கு சொந்தமான இடத்தில் திமுக கிளை அலுவலகம் முன்பு திமுகவினர் வேலி அமைத்து ஆக்கிரமிப்பு செய்வதற்காக கல்லுகளை ஊன்றியதால் பொதுமக்கள் ஆத்திரம்- போராட்டம் நடத்தப் போவதாக அறிவிப்பு
திருச்சி மாநகராட்சி 45 வது வார்டு பொன்மலை பொன்னேரிபுரம் இரண்டாவது தெருவில் நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான இடத்தில் ஏற்கனவே திமுக கிளை அலுவலகம் திறக்கப்பட்டது. ஏற்கனவே இந்த கிளை அலுவலகம் பொது மக்களுக்கு இடையூறாக இருக்கிறது என்று அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் இன்று திடீரென அந்த கிளை அலுவலகத்தை சுற்றி மேலும் இடங்களை ஆக்கிரமிப்பு செய்வதற்காக வேலி அமைப்பதற்காக திமுக நிர்வாகிகள் கல்லுகளை ஊன்றி சென்றனர். இதனைப் பார்த்த சாமானிய மக்கள் நல கட்சி மாவட்ட பொருளாளர் ஜோசப் மற்றும் அப்பகுதி மக்களும், வாகன ஓட்டிகளும் மிகுந்த எரிச்சல் அடைந்து உடனடியாக இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றவில்லை என்றால் மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டும் மற்றும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் அப்பகுதி பொது மக்களும் சாமானிய மக்கள் நலக் கட்சி ஜோசப்பும் தெரிவித்துள்ளனர்.
What's Your Reaction?
Like
1
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0