பொன்மலை துப்பாக்கி சூட்டில் பலியான ரயில்வே தொழிலாளர்களுக்கு தியாகிகள் தினம் அனுசரிக்கப்பட்டது
பொன்மலை துப்பாக்கி சூட்டில் பலியான ரயில்வே தொழிலாளர்களுக்கு தியாகிகள் தினம் அனுசரிக்கப்பட்டது
1946-ம் ஆண்டு வெள்ளையர் ஆட்சியில் விசாரணையின்றி வேலை நீக்கம் செய்யும் உத்தரவுக்கு எதிராக பொன்மலை சங்கத்திடலில் போராடிய ரெயில்வே தொழிலாளர்கள் மீது வெள்ளையர் மற்றும் மலபார் போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினார்கள். இதில், ராஜி, ராமசந்திரன், தங்கவேல், கிருஷ்ணமூர்த்தி,தியாகராஜன் ஆகிய 5 இளம் தொழிலாளர்கள். பலியானார். அவர்களின் நினைவை போற்றக்கூடிய வகையில் 1949-ம் ஆண்டு முதல் தியாகிகள் தினம் கடைபிடிக்கப்படுகிறது. 79-ம் ஆண்டு தியாகிகள் தினத்தை ஒட்டி இன்று காலை புகழஞ்சலி கூட்டமும், அதன் பிறகு வீரவணக்க ஊர்வலம் சென்று பொன்மலை சங்கத்திடலில் தியாகிகளுக்கு மலரஞ்சலி செலுத்தப்பட்டது. நிகழ்ச்சிக்கு டி.ஆர்.இ.யூ. சங்க பொன்மலை கோட்ட தலைவர் லெனின் தலை தாங்கினார். ஊர்வலத்தை சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் ரங்கராஜன் தொடங்கி வைத்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் ஸ்ரீதர், ஜெயசீலன், சிவராஜ், வெற்றி செல்வன், சி.ஐ.டி.யு. நிர்வாகிகள் சீனிவாசன், சந்தானசெல்வன். மற்றும் பெல், ஆட்டோ டிரைவர்கள் உள்ளிட்ட பல்வேறு சங்க கிளைகளின் சார்பில் நினைவிடத்தில் மாலை வைத்து வீரவணக்கம் செய்யப்பட்டது. முடிவில் மகேந்திரன் நன்றி கூறினார்.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0