திருச்சி பொன்மலையில் அரசு பேருந்தில் பள்ளி மாணவர்கள் ரகளை-  பேருந்தை பாதி வழியிலேயே நிறுத்தியதால் பயணிகள் அவதி- போலீசார் வழக்கு பதிவு

Sep 16, 2025 - 20:10
 626
திருச்சி பொன்மலையில் அரசு பேருந்தில் பள்ளி மாணவர்கள் ரகளை-  பேருந்தை பாதி வழியிலேயே நிறுத்தியதால் பயணிகள் அவதி- போலீசார் வழக்கு பதிவு

திருச்சி பொன்மலையில் அரசு பேருந்தில் பள்ளி மாணவர்கள் ரகளை- பேருந்தை பாதி வழியிலேயே நிறுத்தியதால் பயணிகள் அவதி- போலீசார் வழக்கு பதிவு

திருச்சி கீழக்கல்கண்டார் கோட்டையிலிருந்து டிவிஎஸ் டோல்கேட் வழியாக அரசு பேருந்து சத்திரம் பேருந்து நிலையத்திற்கு இன்று காலை சென்று கொண்டிருந்தது பேருந்தை டிரைவர் துரைசாமி ஓட்டி சென்றார். நடத்துனராக செந்தில்குமார் பணிபுரிந்தார். காலை நேரம் என்பதால் பள்ளி, கல்லூரி வேலைக்கு செல்வோர் என 50க்கும் மேற்பட்டோர் பயணம் செய்தனர். மேல கல்கண்டார் கோட்டை ஆத்துப்பாலம் பேருந்து நிறுத்தம் வந்த போது தெப்பக்குளம் பகுதியில் உள்ள ஒரு அரசு உதவி பெறும் பள்ளியில் படிக்கும் 5 க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஏறினர். அவர்கள் பேருந்தில் ரகளை செய்து அதிக கூச்சலிட்டு வந்துள்ளனர். அவர்களை அமைதியாக இருக்கும்படி டிரைவர், நடத்துனர் மற்றும் பஸ் பயணிகள் கூறியுள்ளனர். ஆனாலும் மாணவர்கள் கேட்காமல் அதிக கூச்சலிட்டதால் டிரைவர் அவர்களை திட்டியுள்ளார். அப்போது மாணவர்கள் டிரைவர் மற்றும் நடத்துனரை தாக்க முயன்றதாகவும் கூறப்படுகிறது. இதில் கோபமடைந்த டிரைவர் பொன்மலை கம்பி கேட்டு பகுதியில் பேருந்தை நிறுத்தினார். இதனால் பயணிகள் அவதிக்குள்ளாகினர். அதிக கூச்சலிட்டு ரகளை செய்த பள்ளி மாணவர்கள் பேருந்தில் இருந்து கீழே இறங்கி தப்பி ஓடினர். பின். பேருந்தில் பயணித்த பயணிகள் மற்றும் கல்லூரி மாணவ மாணவிகள் கேட்டுக் கொண்டதால் பேருந்தை ஓட்டுநர் சத்திரம் பேருந்து நிலையத்திற்கு ஓட்டி சென்றார். இந்த சம்பவம் குறித்து ஓட்டுனர் துரைசாமி பொன்மலை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 1
Sad Sad 0
Wow Wow 1