திருச்சி திருவானைக்கோவில் பகுதியில் திமுக ஆட்சியின் அவலங்களை எடுத்துக் கூறும் வகையில் துண்டு பிரசுரம் வழங்கும் நிகழ்வு அ.இ.அ.தி.மு.க சார்பில் நடைபெற்றது

Sep 20, 2025 - 20:22
 14

அம்மா பேரவை மாவட்ட செயலாளர் ஜி.ரமேஷ் ஏற்பாட்டில், திருச்சி புறநகர் வடக்கு மாவட்டம், ஸ்ரீரங்கம் சட்டமன்றத் தொகுதி, திருவானைக்கோவில், கடைவீதியில் மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான மு.பரஞ்ஜோதி தலைமையில் விடியா தி.மு.க ஆட்சியின் அவலங்களை எடுத்து உரைக்கும் வகையில் துண்டு பிரசுரங்களை அஇஅதிமுக நிர்வாகிகள் வழங்கினர். இதில் அமைப்பு செயலாளரும், முன்னாள் தலைமை கொரடவுமான ஆர்.மனோகரன், அமைப்பு செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.வளர்மதி, சிறுபான்மை நல பிரிவு மாநில துணை செயலாளர் ஆர்.எஸ்.புல்லட்ஜான்,  அம்மா பேரவை மாநிலத்துணை செயலாளர் ஜெயம் ஸ்ரீதர், மாவட்ட அவைத் தலைவர் சமயபுரம் ராமு, துணை செயலாளர் கல்லடிப்பட்டி கோவிந்தராஜ், அண்ணா தொழிற்சங்க மண்டல செயலாளர் தர்மராஜ்,

 மண்டல இணைச் செயலாளர் திருப்புகழ் செல்லதுரை, ஒன்றிய கழக செயலாளர் முத்துகருப்பன், பொதுக்குழு உறுப்பினர் பிரியாசிவகுமார், பகுதி செயலாளர்கள் சுந்தரராஜன், டைமன்.திருப்பதி, ஒன்றிய பொருளாளர் சேகர்மணி, அம்மா பேரவை மாவட்ட இணை செயலாளர்கள் ஸ்ரீரங்கம் ரவிசங்கர், வி.என்.ஆர்.செல்வம், எட்டரை அன்பரசு, அண்ணா தொழிற்சங்க மாவட்ட துணைச் செயலாளர் துறையூர் பிரகாஷ், முன்னாள் ஒன்றிய செயலாளர் வாசு, மற்றும் நிர்வாகிகள் ஏகாம்பரம், பெரியசாமி, அன்புசெல்வன், கலைமணி,என்.கண்ணன், உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0