திருச்சி பாபு ரோட்டில் பிரதமர் மோடி பிறந்தநாளை முன்னிட்டு மலைக்கோட்டை மண்டல 14வது வார்டு பா.ஜ.க சார்பாக பொது மக்களுக்கு இலவச மருத்துவ பரிசோதனை முகாம் நடைபெற்றது
பிரதமர் மோடி பிறந்த நாளை முன்னிட்டு 14 வது வார்டு பாஜக மண்டல் சார்பில் இலவச மருத்துவ பரிசோதனை முகாம்
திருச்சி பாபு ரோட்டில் பிரதமர் மோடி பிறந்தநாளை முன்னிட்டு மலைக்கோட்டை மண்டல 14வது வார்டு பா.ஜ.க சார்பாக பொது மக்களுக்கு இலவச மருத்துவ பரிசோதனை முகாம் நடைபெற்றது. இந்த மருத்துவ முகாமில் மண்டல் தலைவர் அஜய் ஜெயச்சந்திரன், மாவட்ட மருத்துவ பிரிவு தலைவர் பரஞ்சோதி, முன்னாள் மத்திய அரசு நலத்திட்ட பிரிவு மாவட்ட தலைவர் மகேந்திரன் மற்றும்
நிர்வாகிகள் சீனிவாசன், ஜெயலட்சுமி, அருணாச்சலம், பாண்டியன், புவனேஸ்வரி, மலர்கொடி, விஜயகுமார், சேகர், வெங்கடேசன், சதீஷ்குமார், சசிகலா, மங்கையர்கரசி, சுஜாதா, செண்பகவல்லி, ஐஸ்வர்யா, ப்ரீத்தி, ராம்குமார், பரமேஸ்வரன், மேக்ஸி விஷன் கண் மருத்துவமனை பி.ஆர்.ஓ சதீஷ் கண்ணன், ஸ்வேதா மருத்துவமனை டாக்டர் சுவாதி, நேதாஜி ஆகியோர் கலந்து கொண்டு
பொதுமக்களுக்கு சிறப்பான முறையில் பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த நாளை முன்னிட்டு இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது . இம் முகாமில் கண் பரிசோதனை, பல் பரிசோதனை, காது, மூக்கு, தொண்டை உள்ளிட்ட பரிசோதனைகள் நடைபெற்றது. இந்த முகாமில் ஏராளமான அப்பகுதி பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0