திருச்சியில் உள்ள அனைத்து ரயில்வே கேட்டுகளிலும் வெடிகுண்டு வைத்திருப்பதாக மர்ம நபர் ஒருவர் மாநகர போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்டு மிரட்டல்- போலீசார், ரயில் பயணிகள் மற்றும் பொதுமக்கள் பீதி

Oct 30, 2025 - 23:43
Oct 30, 2025 - 23:48
 192
திருச்சியில் உள்ள அனைத்து ரயில்வே கேட்டுகளிலும் வெடிகுண்டு வைத்திருப்பதாக மர்ம நபர் ஒருவர் மாநகர போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்டு  மிரட்டல்- போலீசார், ரயில் பயணிகள் மற்றும் பொதுமக்கள் பீதி

திருச்சியில் உள்ள அனைத்து ரயில்வே கேட்டுகளில் வெடிகுண்டு வைத்திருப்பதாக மர்ம நபர் ஒருவர் மாநகர காவல் கட்டுப்பாட்டு அறைக்கு மிரட்டல் - திருச்சி போலீசார், ரயில் பயணிகள் மற்றும் பொதுமக்கள் பீதி

திருச்சி மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறைக்கு நம்பர் 100க்கு இன்று இரவு 7.50 மணிக்கு மர்ம நபர் ஒருவர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு திருச்சியில் உள்ள ரயில்வே லெவல் கிராசிங் கேட்டுகளில் வெடிகுண்டு வைத்துள்ளதாகவும் அது சிறிது நேரத்தில் வெடித்து விடும் என கூறியதாக கூறப்படுகிறது. அதனை தொடர்ந்து அதிரடியாக திருச்சி மாவட்ட போலீசார் மற்றும் ரயில்வே போலீசார் திருச்சி மாவட்டத்தில் பல்வேறு ரயில்வே லெவல் கிராசிங் கேட்டுகள் உள்ளது. இதில் எந்த ரயில்வே கிராசிங் கேட்டில் வெடிகுண்டு வைத்துள்ளார்கள் என்பது சரியாக தெரியாததால் என்ன செய்வது என்று தெரியாமல் உடனடியாக முக்கிய ரயில் நிலையங்கள் அனைத்து திருச்சி மத்திய ரயில் நிலையம், மஞ்சத்திடல் ரயில் நிலையம் மற்றும் ஸ்ரீரங்கம் ரயில் நிலையம் ஆகியவற்றில் திருச்சி மாநகரப் போலீசாருடன் இணைந்து ரயில்வே போலீசாரும், வெடிகுண்டு நிபுணர்களும், மோப்பநாய் நிபுணர்களும் அதிரடியாக வெடிகுண்டு பறிசோதனையில் ஈடுபட்டனர்.

 அதன் ஒரு பகுதியாக திருச்சி பொன்மலை மஞ்சள் திடல் ரயில்வே கேட்டில் ரயில்வே இன்ஸ்பெக்டர் சீலா தலைமையில் எஸ்ஐ மகேஸ்வரன், ஸ்டாலின், அபி அபிராமி மற்றும் ரயில்வே பாதுகாப்பு படை போலீசார், வெடிகுண்டு நிபுணர்கள், மோப்பநாய் ஆகியவை வரவழைக்கப்பட்டு சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக சோதனையில் ஈடுபட்டனர். மேலும் சம்பவ இடத்திற்கு பொன்மலை இன்ஸ்பெக்டர் பெரியசாமி தலைமையிலான போலீசார் விரைந்து வந்து ரயில்வேபோலீசார் உடன் இணைந்து சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என்பது தெளிவானது இதே போல் திருச்சிரயில்வே ஜங்ஷன் மற்றும் ஸ்ரீரங்கம் ரயில் நிலையங்களிலும் நடந்த சோதனை குறளி என தெரிய வந்தது. இதனால் மாநகர போலீசார் ரயில்வே போலீசார் நிம்மதி பதிமூச்சு விட்டனர். இதனால் திருச்சி மாவட்ட போலீசாரையும் ரயில்வே போலீசாரையும் பதட்டத்திற்கு உள்ளாக்கிய அந்த மர்மநபர் எங்கிருந்து போன் செய்தார் என போலீசார் ட்ரேக்செய்து பார்த்த பொழுது அந்த நபர் திருச்சி சுப்பிரமணியபுரம் பகுதியில் இருந்து தொலைபேசியில் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு மிரட்டல் விடுத்துள்ளது தெரியவந்தது. அதன் அடிப்படையில் அந்த பகுதியில் அதிரடியாக போலீசார் சென்று பார்த்த பொழுது அங்கு அந்த நபரை கண்டுபிடிக்க முடியவில்லை. தொடர்ந்து இச் சம்பவம் குறித்து திருச்சி மாவட்ட போலீசாரும் ரயில்வே போலீசாரும் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர். இந்த மிரட்டலால் மாவட்ட போலீசார் மற்றும் ரயில்வே போலீசாரை மட்டுமல்லாது பொது மக்களையும் ரயில் பயணிகளையும் பதட்டத்திற்கு உள்ளாக்கியது

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0