திருச்சியில் வாலிபர் வெட்டி படுகொலை செய்யப்பட்டதை கண்டித்தும்- உடலை வாங்க மறுத்தும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் திருச்சி பீம நகரில் காத்திருப்பு போராட்டம்

Nov 11, 2025 - 15:29
 18

திருச்சி பீமநகரை சேர்ந்த வாலிபர் நேற்று காலை பீம நகர் காவலர் குடியிருப்பில் வைத்து ஐந்து பேர் கொண்ட கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த நிலையில் இளைஞர் தாமரை செல்வன் படுகொலையை கண்டித்தும் எஸ்சி/எஸ்டி வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்படி வழக்கு பதிவு செய்து உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு நிவாரண தொகையும், அரசு வேலையும் வழங்கிட வேண்டுமென உடலை வாங்க மறுத்து, உறவினர்களுடன் மார்க்சிஸ்ட் கட்சி, திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் வெற்றிச்செல்வன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள், ராஜா, லெனின், கார்த்திகேயன், சந்தானம்,தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின், மாநில செயலாளர் கலைச்செல்வி,மாவட்டச் செயலாளர் தோழர் ரேணுகா, மாவட்டத் தலைவர் கனல் கண்ணன், மாவட்ட பொருளாளர் ஜோன்ஸ்,உள்ளிட்ட,புதிய தமிழகம், வீர தேவேந்திர குல வேளாளர் மக்கள் முன்னேற்ற அறக்கட்டளை உள்ளிட்ட இயக்கங்களின் தலைவர்கள் மற்றும் அமைப்புகளின் சார்பில் பீமநகர் செடல் மாரியம்மன் கோயில் அருகே காத்திருக்கும் போராட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான கட்சி நிர்வாகிகள் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0