வீர முத்தரையர் முன்னேற்ற சங்க மாநில அமைப்பாளராக கள்ளிக்குடி ராஜேந்திரன் நியமனம் திருச்சியில் நடைபெற்ற தமிழர் தேசம் கட்சி ஆலோசனைக் கூட்டத்தில் நிறுவனத் தலைவர் கேகே செல்வகுமார் அறிவிப்பு

Nov 12, 2025 - 22:34
 17

 தமிழர் தேசம் கட்சியின் சார்பில் வருகிற ஜனவரி 25 -ந் தேதி திருச்சியில் முத்தரையர் அரசியல் அதிகார மீட்பு மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாடு தொடர்பாக அக்கட்சியின் திருச்சி மாவட்ட நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் இன்று திருச்சியில் நடந்தது. தமிழர் தேசம் கட்சியின் தலைவரும் வீர முத்தரையர் முன்னேற்ற சங்க நிறுவனத் தலைவருமான கே கே செல்வகுமார் தலைமை தாங்கினார்.

மாநில பொதுச் செயலாளர் தளவாய் ராஜேஷ் மாநில அமைப்பு செயலாளர் மகுடேஸ்வரன், வீர முத்தரையர் முன்னேற்ற சங்க இளைஞரணி ஒருங்கிணைப்பாளர் துரைகுணசேகரன், வீர முத்தரையர் முன்னேற்ற சங்க மாநில அமைப்பாளர் கள்ளிக்குடி எம். ராஜேந்திரன், மாநகர மாவட்ட செயலாளர் வள்ளல் மணி, வழக்கறிஞர் கௌதம் மற்றும் கட்சியின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில் கே கே செல்வகுமார், வீர முத்தரையர் முன்னேற்ற சங்கத்தின் மாநில அமைப்பாளராக கள்ளிக்குடி எம். ராஜேந்திரனை அறிவித்தார்.

தற்போது திருச்சி மாநகர் மாவட்ட பாஜக துணைத் தலைவராக பொறுப்பு வகித்து வரும் இவர் 1994களில் இந்து முன்னணி ஒன்றிய தலைவராகவும், 3 வருடங்கள் மாவட்ட தலைவராகவும் பதவி வகித்தார்.2004 முதல் 2010 வரை பாஜக மணிகண்டம் ஒன்றிய தலைவராகவும், 4 ஆண்டுகள் திருச்சி மாவட்ட பாஜக செயலாளர் ஆகவும், பாஜக விவசாய அணி மாநில செயலாளர் மற்றும் கோட்ட பொறுப்பாளராகவும் திறம்பட பதவி வகித்தார். மேலும் இப்போது தமிழ்நாடு அனைத்து வணிகர் சங்க பேரமைப்பின் திருச்சி மாவட்ட தலைவராகவும் பதவி வைத்து வருகிறார். வீர முத்தரையர் முன்னேற்ற சங்கத்தில் கள்ளிக்குடி ராஜேந்திரனுக்கு புதிய பதவி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து அவருக்கு கட்சியின்மூத்த நிர்வாகிகள் மற்றும் வீர முத்தரையர் முன்னேற்ற சங்க நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனர். கூட்டத்தில் கேகே செல்வகுமார் பேசும்போது, ஜனவரி 25ஆம் தேதி நடைபெறும் முத்தரையர் அதிகார மீட்பு மாநாடு வெற்றி மாநாடாக அமைய அனைவரும் பாடுபட வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0