*திருவெறும்பூர் ரயில் நிலையத்தில் முக்கிய கோரிக்கையை நிறைவேற்றி தந்த சமூக ஆர்வலருக்கும், மதிமுக வட்ட செயலாளருக்கும் அப்பகுதி மக்கள் நன்றிகளை தெரிவித்துள்ளனர்*

Feb 25, 2026 - 22:11
 73
*திருவெறும்பூர் ரயில் நிலையத்தில் முக்கிய கோரிக்கையை நிறைவேற்றி தந்த  சமூக ஆர்வலருக்கும், மதிமுக வட்ட செயலாளருக்கும் அப்பகுதி மக்கள் நன்றிகளை தெரிவித்துள்ளனர்*

திருவெறும்பூர் ரயில் நிலையத்தில் முக்கிய கோரிக்கையை தீர்த்து வைத்த சமூக ஆர்வலருக்கும், மதிமுக வட்ட செயலாளருக்கும் அப்பகுதி மக்கள் நன்றிகளை தெரிவித்துள்ளனர்

திருச்சி திருவெறும்பூர் பகுதியில் முக்கிய ரயில் நிலையம் இயங்கி வருகிறது. இங்கு தினம் தோறும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர். இந்த ரயில் நிலையத்தில் தக்கல் முன் பதிவும் செய்யப்பட்டு வருகிறது. இதற்காக அங்கு டிக்கெட் வழங்கும் இடத்திற்கு முன்பு 12 இருக்கைகள் போடப்பட்டுள்ளது. இதில் தக்கல் பதிவு செய்ய வருபவர்கள் ரேஷன் கடையில் மண்ணெண்ணெய் வாங்குவதற்கு கற்களை வைப்பது அந்தப் 12 இருக்கைகளிலும் தக்கல் டிக்கெட் புக் பண்ணுவதற்காக அதேபோல் ஸ்லிப் வைத்து அதன் மீது கற்களை வைத்து விட்டு செல்வதாகவும் இதனால் பயணிகளுக்கு இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்ததாகவும் இது குறித்து அப்பகுதியை சேர்ந்த திருவெறும்பூர் வள்ளுவர் நகரை சேர்ந்த வினோத் பாண்டி மற்றும் 41 வது வார்டு மதிமுக வட்ட செயலாளர் மாரியப்பன் ஆகியோர் ரயில்வே நிர்வாகத்திடம் இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் விழிப்புணர்வு பதாகை வைக்க வேண்டுமெனவும் கோரிக்கை மனு அளித்தனர்.

 இந்த நிலையில் ரயில்வே நிர்வாகம் தக்கல் டிக்கெட் புக் செய்யும் இடம் முன்பு ரயிலில் பயணம் செய்ய தக்கல் முன்பதிவிற்கு இருக்கையில் அமர்ந்திருப்பவர்களுக்கு மட்டும் டோக்கன் வழங்கப்படும் இருக்கையில் முன்னதாக ஸ்லிப் வைத்து விட்டு சென்றால் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது என்று நோட்டீஸ் ஒட்டி உள்ளது. மேலும் அந்த இருக்கைகளில் எண்ணிக்கை நம்பர் அடங்கிய ஸ்டிக்கரும் ஒட்டப்பட்டுள்ளது இதனை சமூக ஆர்வலர் வினோத் பாண்டியும், மதிமுக வட்ட செயலாளர் மாரியப்பனும் ரயில்வே நிர்வாகத்திற்கு நன்றி தெரிவிப்பதாகவும் கூறியுள்ளனர். இது சம்பந்தமாக அப்பகுதி பொதுமக்கள் சமூக ஆர்வலர் வினோத் பாண்டிக்கும் மதிமுக வட்ட செயலாளர் மாரியப்பனுக்கும் நன்றி தெரிவித்துள்ளனர்.

What's Your Reaction?

Like Like 1
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0