*திருவெறும்பூர் அருகே பத்தாளப்பேட்டையில் சாக்கடை நீர் செல்வதற்காக சாலையின் குறுக்கே வாய்க்கால் வெட்டியதால் வாகனங்கள் செல்ல முடியாமல் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் தவிப்பு*

Mar 6, 2026 - 21:29
 55
*திருவெறும்பூர் அருகே பத்தாளப்பேட்டையில் சாக்கடை நீர் செல்வதற்காக சாலையின் குறுக்கே வாய்க்கால் வெட்டியதால் வாகனங்கள் செல்ல முடியாமல் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் தவிப்பு*

திருவெறும்பூர் அருகே பத்தாளப்பேட்டையில் சாக்கடை நீர் செல்வதற்காக சாலையின் குறுக்கே வாய்க்கால் வெட்டியதால் வாகனங்கள் செல்ல முடியாமல் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் தவிப்பு

திருச்சி திருவெறும்பூர் அருகே திருவெறும்பூர் பஞ்சாயத்துக்கு உட்பட்ட பத்தாளப் பேட்டை மாதா கோவில் தெருவில் தனி நபர் ஒருவர் சில நாட்களாக பஞ்சாயத்து சார்பில் அமைக்கப்பட்டிருந்த சாக்கடையை மண்ணை கொட்டி அடைத்ததாக கூறப்படுகிறது. இதனால் அந்த பகுதியில் சாக்கடை நீர் சூழ்ந்து துர்நாற்றம் வீசுவதோடு பொது மக்களுக்கு பல நோய்களும் ஏற்பட்டு வருகிறது. இந்த நிலையில் அதன் அருகே வசித்து வரும் தனி நபர்கள் இருவர் சேர்ந்து சாக்கடை நீரை வெளியேற்றுவதற்காக அந்த சாலையின் குறுக்கே வாய்க்கால் போன்று வெட்டி வருவதாகவும் இதனால் வாகன ஓட்டிகளும் செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது மேலும் வயதானவர்களும் குழந்தைகளும் தடுமாறி அதில் விழும் நிலை ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே பொதுமக்கள் சாக்கடையை அடைத்தது குறித்து பஞ்சாயத்து அலுவலகத்தில் புகார் அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் உடனடியாக சாலையின் குறுக்கே வெட்டப்பட்ட வாய்க்காலை மூட வேண்டும் எனவும் அப்படி மூடவில்லை என்றால் பொதுமக்களை திரட்டி போராட்டம் நடத்தப்படும் எனவும் அப்பகுதி மக்கள் கூறியுள்ளனர். இது சம்பந்தமாக உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளும், திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினரும் பள்ளி கல்வித்துறை அமைச்சர் மன அன்பில் மகேஷ் பொய்யா மொழியும் கவனத்தில் எடுத்துக் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

What's Your Reaction?

Like Like 2
Dislike Dislike 1
Love Love 0
Funny Funny 1
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0