புல்வாமா தாக்குதலில் வீர மரணம் அடைந்த இரண்டு ராணுவ வீரர்கள் திரு உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தி அவர்களது குடும்பத்திற்கு ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலையை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் செல்வ பெருந்தகை வழங்கினார்

Sep 11, 2025 - 20:11
 14

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி சார்பாக புல்வாமா தாக்குதலில் வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்கள் சிவசந்திரன், சுப்பிரமணியன் ஆகியோரின் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தி, அவர்களது குடும்பத்தினருக்கு தலா ஒரு லட்சத்திற்கான காசோலையினை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை எம்எல்ஏ வழங்கினார். அருகில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் மாநில தலைவர் திருநாவுக்கரசர் முன்னிலையில், திருச்சி மாநகர் மாவட்ட தலைவர் கவுன்சிலர் ரெக்ஸ், தெற்கு மாவட்ட தலைவர் கவுன்சிலர் கோவிந்தராஜ், வடக்கு மாவட்ட தலைவர் கலை, முன்னாள் ராணுவத்தினர் அணி மாநிலத் தலைவர் ராஜசேகரன், ஆகியோர் உடன் இருந்தனர்.

நிகழ்வில் மாநிலத் துணைத் தலைவர் சொர்ணா சேதுராமன், மாநில பொருளாளர் ரூபி மனோகரன், மாநில செய்தி தொடர்பாளர் வேலுச்சாமி, அகில இந்திய செயலாளர் கிரிஸ்டோபர் திலக், பாராளுமன்ற பொறுப்பாளர் பெனட் அந்தோணி ராஜ், மாநகர் மாவட்ட பொருளாளர் முரளி, வழக்கறிஞர் சரவணன், கலைப் பிரிவு மாநில தலைவர் பேராசிரியர் பெஞ்சமின் இளங்கோ, சுப்ரமணியபுரம் கோட்டத் தலைவர் எட்வின் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0