தமிழ்நாடு கொசு ஒழிப்பு களப்பணியாளர்கள் நலச்சங்கம் சார்பில் திருவெறும்பூர் அருகே உள்ள காட்டூரில் நடந்த 5 வது மாநில மாநாடு மற்றும் மாநில பொதுக்குழு கூட்டத்தில் கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி இறந்த பொது மக்களுக்கு இரங்கள் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது
தமிழ்நாடு கொசு ஒழிப்பு களப்பணியாளர்கள் நலச்சங்கம் சார்பில் திருவெறும்பூர் அருகே உள்ள காட்டூரில் நடந்த 5 வது மாநில மாநாடு மற்றும் மாநில பொதுக்குழு கூட்டத்தில் கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி இறந்த பொது மக்களுக்கு இரங்கள் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது
இந்த மாநாட்டுக்கு மாநிலத் தலைவர் இளங்கோவன் தலைமை வகித்தார். தமிழ்நாடு கொசு ஒழிப்பு பணியாளர் நலச் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் தயாளன் கோரிக்கைகள் குறித்து விளக்க உரையாற்றினார். திருச்சி மாவட்டத்தில் துணை சுகாதார இயக்குனர் அலுவலகத்தின் மூலம் 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வேலை செய்த 280 பேருக்கு சம்பளம் வழங்காமல் உள்ளதை உடனடியாக வழங்க வேண்டும். சம்பளம் வழங்கவில்லை என்றால் சென்னையில் உள்ள அலுவலகத்தை அனைத்து தொழிலாளர்களை இணைந்து ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். ஆண்டு முழுவதும் தங்கு தடையின்றி பணி வழங்க கோரி உச்சிநீதிமன்ற தீர்ப்பின்படி சம வேலைக்கு சம ஊதியம் வழங்கிட வேண்டியும் 5 ஆண்டு முதல் 18 ஆண்டுகள் வரை ஊரக வளர்ச்சித்துறை, உள்ளாட்சி துறை கொசு ஒழிப்பு களப்பணியாளர்களுக்கு தொகுப்பு ஊதியத்தில் பணியமர்த்திட கோரி. தமிழக முதல்வர் அறிவித்த சிறப்பு கொரோனா நிவாரணநிதி கொசு ஒழிப்பு களப்பணியார்களுக்கு வழங்கிட வேண்டும். 2021 ஆம் ஆண்டு தேர்தல் அறிக்கையில் 317ன் படி ஊராட்சி,பேரூராட்சி,நகராட்சி, மாநகராட்சிகளில் களப்பணியாளர்களுக்கு தொகுப்பு ஊதியத்தில் பணியமர்த்திட கோரியும் கரூரில் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கள் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. இந்த மாநில மாநாட்டுக்கு திருச்சி, புதுக்கோட்டை, கள்ளக்குறிச்சி, திருப்பூர், தர்மபுரி, மதுரை, நீலகிரி மற்றும் தென்காசியில் இருந்து கொசு ஒழிப்பு பணியாளர்கள் இந்த மாநாட்டில் கலந்து கொண்டனர். முன்னதாக மாவட்ட தலைவர் ஜான் பீட்டர் வரவேற்றார் ஊடகப்பிரிவு செயலாளர் மனோகரன் நன்றி கூறினார்
What's Your Reaction?
Like
1
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0