கோவை கல்லூரி மாணவி கூட்டு பாலியல் கொடுமையை கண்டித்து-திருச்சி பாஜக மகளிர் அணி சார்பில் மாவட்ட ஆட்சியரகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம்- திரளான பாஜகவினர் பங்கேற்பு

Nov 6, 2025 - 22:14
 10

கோவை கல்லூரி மாணவிக்கு நிகழ்ந்த கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு எதிராக தமிழகம் முழுவதும் பாஜக கட்சியை சேர்ந்த மகளிரணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். தமிழகத்தில் பெண்கள் பாதுகாப்புக்கு உரிய சட்டம் இயற்ற வலியுறுத்தியும், பெண்களுக்கு பாதுகாப்பற்ற மாநிலமாக தமிழகத்தை மாற்றிய திமுக அரசே மக்களிடம் மன்னிப்புகேள் என்பதனை வலியுறுத்தி பாரதிய ஜனதாகட்சி மகளிர் அணி சார்பில் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் பாஜக மகளிர் அணி மாவட்டத் தலைவர் மலர்கொடி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று மாலை நடைபெற்றது.

 இந்த ஆர்ப்பாட்டத்தை மாவட்டத் தலைவர் ஒண்டி முத்து துவக்கி வைத்தார் ஆர்ப்பாட்டத்தில் பாலியல் வன்கொடுமைக்கு எதிராக பதகை ஏந்தி 100க்கும் மேற்பட்ட பாஜக மகளிர் அணியை சேர்ந்த பெண்கள் பங்கேற்று திமுக அரசுக்கு எதிராக கண்டனம் முழக்கங்கள் எழுப்பினர். மேலும் எம்பி கனிமொழி மதுவிலக்கு பற்றி பேசியவர் தற்போது வாய்மொழி மௌனம் காப்பது ஏன் என்றும் பல்வேறு கேள்விகளை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் பாஜக மாவட்ட மகளிர் அணி நிர்வாகிகள் உறுப்பினர்கள் மற்றும் பாஜக தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0