*திமுக அரசு தை 1ம் தேதிக்குள் எங்களது கோரிக்கைகளை நிறைவேற்றினால் விறகுகளால் பொங்கல் வைப்போம் இல்லையென்றால் தேர்தலில் விரல்களால் பொங்கல் வைப்போம் என ஆசிரியர்கள் எச்சரிக்கை*

Dec 26, 2025 - 18:56
 115
*திமுக அரசு தை 1ம் தேதிக்குள் எங்களது கோரிக்கைகளை நிறைவேற்றினால் விறகுகளால் பொங்கல் வைப்போம் இல்லையென்றால் தேர்தலில்  விரல்களால் பொங்கல் வைப்போம் என ஆசிரியர்கள் எச்சரிக்கை*

திமுக அரசு தை 1ம் தேதிக்குள் எங்களது கோரிக்கைகளை நிறைவேற்றினால் விறகுகளால் பொங்கல் வைப்போம் இல்லையென்றால் தேர்தலில் விரல்களால் பொங்கல் வைப்போம் என ஆசிரியர்கள் எச்சரிக்கை

 2013 ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் பணி வழங்க வேண்டும் என வலியுறுத்தி திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது ஆசிரியர் பணியில் சேர்வதற்கு ஆசிரியர் தகுதி தேர்வு கட்டாயமாக உள்ளது. இந்த நிலையில் 2013 ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதி தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற சுமார் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு இது வரை பணி வழங்கப்படாமல் உள்ளது. தங்களுக்கு உடனடியாக பணி வழங்க வேண்டும் என வலியுறுத்தி தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

டெட் தேர்வில் தேர்ச்சி பெற்றோருக்கு பணி வழங்குவதை தடுக்கும் அரசாணை 149 ஐ ரத்து செய்ய வேண்டும், ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி அடைந்தவர்களுக்கு பணி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்கிற திமுகவின் தேர்தல் வாக்குறுதி 177 ஐ உடனடியாக அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 2013 ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றோர் சங்கத்தினர் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதுவரை 99 போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில் 100 வது போராட்டம் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே இன்று நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் 500 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கோரிக்கைகள் அடங்கிய பதாகைகளை ஏந்தி முழக்கஙகளை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திமுக ஆட்சி அமைய நாங்கள் முக்கிய காரணமாக இருந்தோம் எங்களைக்கு பணி வழங்கப்படும் என திமுக தேர்தல் வாக்குறுதியாக அறிவித்தது ஆனால் நிறைவேற்றப்படவில்லை இன்றுடன் நூறாவது போராட்டம் நாங்கள் நடத்துகிறோம் இதுதான் எங்களுடைய கடைசி போராட்டம் வரும் தை மாதம் ஒன்றாம் தேதிக்குள் எங்களுடைய கோரிக்கைகள் நிறைவேற்றி தரப்பட வேண்டும் இல்லை என்றால் திமுக ஆட்சியை வீட்டிற்கு அனுப்புவோம் என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0